கேவலம் இப்படியெல்லாமா பணம் சம்பாதிப்பது? ஆபாச சைக்கோவின் அட்ராஸிட்டி

கேவலம் இப்படியெல்லாமா பணம் சம்பாதிப்பது? ஆபாச சைக்கோவின் அட்ராஸிட்டி

பப்ஜி என்ற தடைசெய்யப்பட்ட விளையாட்டில் வெல்வது எப்படி என்பது தொடர்பாக யூ-டியூப்பில் அடிக்கடி வீடியோ வெளியிடுபர் மதன். இதன் காரணமாக 'பப்ஜி மதன்' என்றே அழைக்கப்பட்டார். முதலில் பப்ஜி விளையாட்டின் நுணுக்கங்களை பற்றி கூறிய இவர், பிறகு  தன்னோடு விளையாகும் சக பெண்களை காதால் கேட்க முடியாத அளவு கொச்சையாகவும், பாலியல் ரீதியாகவும் பேசி வந்தார். அவரின் இந்த பேச்சை ரசித்து 8 லட்சத்துக்கும் அதிகமானோர் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

அப்படி பின்தொடர்பவர்களிடமிருந்து அவர் குறிப்பிட்ட அளவு தொகையையும் வசூலித்திருக்கிறார். அவரது பேச்சிக்காகவும், அவரது பாலியல் சீண்டல்களுக்காகவும் அவர் மேல் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் தலைமறைவானார். அதன் பின் அவரது  யூ-டியூப் பக்கத்தை நிர்வகித்து வந்ததற்காக அவரது மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு நபர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றில் குறிப்பிட்ட சில கருத்துக்கள் சில... 

பப்ஜி மதன் மாதிரி கெட்டவார்த்தை கேமிங் சேனலை ஒரு பெண்ணும் நடத்துவதாகவும், அந்த ஏரியாவில் கீச்சுக்குரல்ல அவர் பொழியற வசைகளுக்கும் ஒரு பிரத்தியேக ஃபேன் ஃபாலோயிங் உண்டு என்றும் மற்றொரு செய்தி. தோண்ட தோண்ட மம்மி பூச்சிகள் வந்துக்கிட்டே இருக்கு. போதும்டா சாமீ

இத்தனை நாள் முகம் காட்டாமல் இருந்த #madanop இவர் தான். அருகில் இருப்பவர் மனைவி கிருத்திகா. இருவரும் சேர்ந்தே யூட்யூபில் பப்ஜி விளையாடி, ஆபாசமாக பேசி பலரிடம் பணம் சம்பாதித்துள்ளதாக 159+ புகார்கள். 2BMW கார்கள், சொகுசு பங்களா சென்னையில் வாங்கியுள்ளனர். மனைவி கைது, மதன் தலைமறைவு என்று கூறியுள்ளார். 

 யூ-டியூபர் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்துள்ளது. யூ-டியூபர் மதன் நடத்தும் சேனலின் நிர்வாகி என்பதால் கிருத்திகாவை காவல்துறை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.


பப்ஜி மதன் என்று அடைமொழியோடு அழைக்கப்படுகிற அளவுக்கு பாப்புலராகி இருக்கிறார் மதன். இவர், பப்ஜி விளையாட்டில் உள்ள ட்ரிக்ஸ் பற்றி பேச கடந்த 2019ம் ஆண்டு மதன் யூடியூப் சேனல் உருவாக்கினார். பப்ஜி கேம்களில் எளிதில் வெல்வதற்கான டிப்ஸ்களைச் சொல்லித் தருவதாக இதை உருவாக்கினாராம். 

டீனேஜ் பசங்களுக்கு பப்ஜி மதன் மாதிரியான ஆள்களை ஏன் பிடிக்கிறது என்றால், பிலாசபி என்ற பெயரில் கண்ட கருமத்தையும் பேசி நல்லா படிக்கற பசங்க மனசையும் எப்டி கலைக்கிறான்கள் என்றால், இதுமாதிரி கேனத்தனமான வேலைக்கு விஜய்டிவி மாகாபா எனும் சொம்பைப்பயல் எப்படி துணை போயிருக்கிறான் 

மனைவியுடன் சேர்ந்து ஆபாசமாக பேசி சிறுவர், சிறுமிகளுடன் பப்ஜி விளையாட்டில் பலகோடி சம்பாதித்த கேடி பஜ்ஜி மதன்....ஒன்றிய இந்தியாவின் #DigitalIndia வை சரியாக உபயோகித்த மன்மதன்.

சும்மா  இருந்தாலே  கைது  பண்றதுதான்.  சவால்  வேற  விட்டு  ஏண்டா  மாட்டிக்கறீங்க?

மொத மதன் விபிஎன் போட்டு ஆடல ,  அவன் விளையாண்டது கொரியன் வெர்சன் , அப்பறம் தமிழ்ல நிறைய பப்ஜி சேனல் இருக்கு , மதன் அளவு யாருக்கும் ரீச் இல்ல, இத்தனைக்கும் நேசமணி கேமிங் நிறைய செலிப்ரட்டி கூப்டுவந்து மேட்ச் ஆடுவானுக, கேம்ல உண்மையாவே மதன் கில்லி

டிக்டாக் பேம் என சொல்லிக்கொள்ளும் பலர் யூடியூப்பில் ஒருவரை ஒருவர் ஆபாசமாக பேசியே வீடியோ அப்லோடு செய்கின்றனர். பப்ஜி மதன் மீது பாயும் நடவடிக்கை போல் அவர்கள் மீதும் பாய்ந்தால் நலம்

இந்த யூட்யூப் கேம் ஸ்ட்ரீமிங் கலாச்சாரம் பத்தி தெரிஞ்சவங்க யாராவது சொல்லமுடியுமா. மணிக்கணக்குல யாரோ வீடியோகேம் ஆடுறதை லைவா பார்க்குற டார்கெட் ஆடியன்ஸ் யாரு? எந்த அடிப்படைல டொனேஷன் வசூலிக்கறாங்க? பப்ஜி மதன் ஃபேன்ஸ்னு பொடிப்பசங்க திரியறது அவனோட வீடியோகேம் ஆடுற ஸ்கில்லுக்காகவா?

பப்ஜி மதன் எனும் கயவன் விரைவில் பிடிபடுவான்.ஒரு குடும்பமே சமூகத்தை கெடுத்துள்ளது.இளைஞர்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். செல் போனை அவ்வப்போது வாங்கி செக் செய்யவேண்டும். எந்நேரமும் செல் போன் உபயோகிப்பதை கண்டிப்புடன் தடுக்க வேண்டும்.பெற்றோர் மனது வைத்தால் சமூகம் மாறும்.

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை ஆபாசமாக பேசி நிறை இளைஞர்கள் விளையாடுறாங்க. டாக்சிக் மதன் வலையொளியில் வீடியோவை இப்பொழுது தான் பார்த்தேன். இந்த சமுதாயம் பேராபத்தான நிலைக்கு செல்கிறது ஒருபுறம் மது போதைபழக்கம் வேறு. தமிழக காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்படி மதன் பற்றிய தங்கள் கருத்துக்களை நெட்டிசன்கள் கூறி தங்கள் ஆதங்கத்தை பதிவு செய்து வருகிறார்கள்.