மகாராஷ்டிராவின் புதிய சபாநாயகர் யார்?

மகாராஷ்டிராவின் புதிய சபாநாயகர் யார்?

மகாராஷ்டிரா சட்டப்பேரவை சபாநாயகருக்கான தேர்தல் இன்று நடந்தது. பாரதிய ஜனதா கட்சியின் ராகுல் நர்வேகர், சிவசேனா கட்சியின் ராஜன் சல்வி ஆகியோர் போட்டியிட்டனர்.

சட்டமன்ற உறுப்பினர்களால் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். மொத்தமுள்ள 288 சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மை வாக்குகளைப் பெறுபவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

மகாராஷ்டிர சபாநாயகருக்கான தேர்தலில் 164 வாக்குகள் பெற்று தேசிய ஜனநாயக் கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் ராகுல் நர்வேகர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிவசேனா சார்பில் போட்டியிட்ட ராஜன் சல்வி 107 வாக்குகள் பெற்றார்.