ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை....காங்கிரஸ் அதிருப்தி!!!

ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை....காங்கிரஸ் அதிருப்தி!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைப் போல தங்களையும் விடுவிக்க வேண்டும் என நளினி உள்ளிட்ட ஆறு பேர் மனு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்திருந்தனர்.

ராஜீவ் காந்தி கொலை:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 26 தமிழர்களுக்கு 1998 ஆம் ஆண்டு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்திருந்தது.

பேரறிவாளன் விடுதலை:

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம், நன்னடத்தை மற்றும் பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உச்ச நீதி மன்றம் தனக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 142 இன் படி கடந்த மே மாதம் பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கி தீர்ப்பளித்தது.

இன்று விசாரணை:

பேரறிவாளைனைப் போன்றே தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீது எற்கனவே விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பேரறிவாளனுக்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பு ஏனைய 6 பேருக்கும் பொருந்தும் என தெரிவித்த நீதிபதிகள், சிறையில் இருக்கும் 6 பேருக்கும் விடுதலை அளித்து உத்தரவிட்டுள்ளது. 

வருத்தம் தெரிவித்த காங்கிரஸ்:

”முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மீதமிருந்த கொலையாளிகள் விடுதலை செய்யப்பட்டது முற்றிலும் தவறானது மற்றும் ஏற்றுக்கொள்ளதகாதது.  காங்கிரஸ் கட்சி இதை தெளிவாக விமர்சிப்பதோடு ஏற்றுக்கொள்ளவும் செய்யாது.” என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

”இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உண்மையாக நடந்து கொள்ளாதது முற்றிலும் வருந்தத்தக்கது.” என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் விமர்சித்துள்ளார்.

அது என்ன சாசனப் பிரிவு 142:

சட்டப்பிரிவு 142 உச்ச நீதிமன்றத்திற்கு தன்னிச்சையான அதிகாரத்தை வழங்குகிறது.  அதாவது உச்ச நீதிமன்றம் தனது அதிகார வரம்பைப் பயன்படுத்தி தன்னிச்சையாக ஒரு ஆணையை நிறைவேற்றலாம் அல்லது அதன் முன் நிலுவையில் உள்ள எந்தவொரு வழக்கிலும் முழுமையான நீதியை வழங்குவதற்குத் தேவையான  உத்தரவை யாருடைய தலையீடும் இன்றி தன்னிச்சையாக உருவாக்கலாம்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com