போயஸ் கார்டனில் 1989-ல் எங்க சின்னம்மா காலில் விழுந்தது நியாபகம் இருக்கா? - ஒரு சசிகலா தொண்டனின் குமுறல்.! 

போயஸ் கார்டனில் 1989-ல் எங்க சின்னம்மா காலில் விழுந்தது நியாபகம் இருக்கா? - ஒரு சசிகலா தொண்டனின் குமுறல்.! 

அண்மையில் நடந்து முடிந்த 2021-ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக தோல்வியை சந்தித்தது. இதற்கு பல காரணங்கள் தெரிவிக்கப்பட்டாலும் ஓபிஎஸ், இபிஎஸ் ஒருவருக்கொருவர் மறைமுகமாக மோதிக்கொண்டதும், சசிகலா கட்சியில் இல்லாததும் தான் என்று சொல்லப்பட்டன.

இதனால் அதிமுக தொண்டர்கள் சிலர் சசிகலாவிடம் போனில் உரையாடி தாங்கள் மீண்டும் கட்சிக்குள் வரவேண்டும் என தங்களது மனகுமுறல்களை கொட்டிதீர்த்தனர். இதனை பொருமையாக கேட்டுக்கொண்ட அவர், தான் விரைவில் தொண்டர்களை சந்திப்பேன் எனவும், கட்சியை சரிசெய்துவிடலாம் எனவும் தொண்டரை சமாதானப்படுத்தியுள்ளார். இந்த ஆடியோக்கள் வெளியாகி தமிழகத்தை பரபரப்பாக்கின.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி "சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் கட்சியில் இல்லை. அதிமுவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் சசிகலா கருத்துகளை சொல்லி வருகிறார். 

இதற்காக ஒரு அதிமுக தொண்டர்கள் கூட செவி சாய்க்கமாட்டார்கள். ஒன்னரை கோடி அதிமுக தொண்டர்கள் இந்த இயக்கத்தை காத்து வருகின்றனர். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இடையை குழப்பத்தை ஏற்படுத்த இதுபோல் செய்து வருகின்றனர். அதிமுக எந்த தொண்டனும் சசிகலாவிடம் பேசவில்லை. மாறாக சசிகலாதான் போன் செய்து பேசுகிறார். சசிகலாவிடம் உள்ளவர்கள் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலாவை துண்டிவிடுகின்றனர். அதனை சசிகலா அறிந்து கொள்ள வேண்டும். அம்மா ஆன்மா சாந்தி அடைய வேண்டுமானால் சசிகலா அமைதியாக இருக்க வேண்டும்" எனக் கருத்து தெரிவித்தார்.

அவரின் இந்த கருத்து சசிகலா ஆதரவாளர்களிடையே கடும் கோவத்தை ஏற்படுத்தியது. அவர்கள் கடுமையாக  முனுசாமியை விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் சசிகலா ஆதரவாளர் ஒருவரின் கருத்து சமூக வலைத்தளங்களில் வைரஸ் ஆகி வருகிறது. 

அந்த பதிவில் "துரோகத்தின் மொத்த உருவம் கே பி முனுசாமியே 2014 பாராளுமன்ற தேர்தலில் அ இ அ தி மு க இயக்கத்திற்கும் புரட்சித்தலைவி அம்மாவிற்கே துரோகம் செய்து அன்புமணி ராமதாஸுடன் கூட்டனி சேர்ந்து அவரை எம்.பி தேர்தலில் ஜெயிக்க வைத்த பச்சை துரோகியே. அம்மாவிற்கே துரோகம் செய்த உன்னை ஒரே நாளில்  அமைச்சர் பதவி ஐவர் குழு பதவி மாவட்ட செயலாளர் பதவி உள்பட அனைத்து பதவிகளிலிருந்தும் பறித்தார். அஇஅதிமுக கட்சியை  புரட்சித்தலைவர் MGRஅவர்களால் உருவாக்கப்பட்டு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கட்டி காக்கப்பட்ட இயக்கம்.


 1987 ல் கட்சி பிளவுபட்ட போது அம்மா அவர்களே அரசியலில் இருந்து விலகி நினைத்தபோது  அம்மாவிற்காக உயிரையே பணயம் வைத்து பாதுகாத்த  குடும்பம் தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் குடும்பம் என்பது ஒவ்வொரு அஇஅதிமுக தொண்டனுக்கும் தெரியும், நீங்கள் பதவிக்காக போயஸ் கார்டனில் 1989-ல் எங்க சின்னம்மா காலில் விழுந்தது நியாபகம் இருக்கா?" என்று கூறப்பட்டுள்ளது. 

மற்றொரு பதிவில் "புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உடனிருந்து, அஇஅதிமுகவை 2021 வரை ஆட்சியில் அமர வைக்க காரணமாக இருந்தது தியாகத்தாய் சின்னம்மா அவர்கள் தான் என்று நாடே ஏற்றுக் கொண்டு விட்டது. அஇஅதிமுக தொண்டர்கள் நிருவாகிகள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஒருங்கிணைப்பாளர்களாகிய நீங்கள் மட்டும் சின்னம்மா வேண்டாம் என ஏன் அடம்பிடிக்கிறீர்கள்?

கூவத்தூரில் சின்னம்மாவும் அண்ணன் டிடிவியும் தானே EPS ஐ முதலமைச்சராக தேர்வு செய்தார்கள்.. இல்லை நீங்களாக தேர்வு செய்தீர்கள்! அஇஅதிமுக பைலாவின் படி கழக பொதுச் செயலாளர் பதவியை நீக்கிட இயலாது. 29.12.2016 ம் தேதியிலிருந்து சின்னம்மா தான் அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர். நீங்கள் அவரை கட்சியிலிருந்து நீக்கியது செல்லாது. நீங்கள் உருவாக்கியுள்ள ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அஇஅதிமுகவின் பைலாவிற்க்கு எதிரானது. உங்கள் கழக துணை ஒருங்கிணைப்பாளர் பதவியை அஇஅதிமுக அடிப்படை உறுப்பினர்களா தேர்வு செய்து உங்களுக்கு கொடுத்தார்கள். சின்னம்மாவை நீக்கிட நீங்கள் நடத்திய செயற்குழு பொதுக்குழுவே செல்லாது. கழக பொதுச்செயலாளர் சின்னம்மா தொடுத்த வழக்கு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

அஇஅதிமுக வின் கம்பீரத்தலைமையே சின்னம்மா மட்டும் தான்.. சின்னம்மா அவர்களின் காலில் விழுந்து பதவி பிச்சை கேட்டு பெற்று அரசியலில் வாழ்வு பெற்ற உம்மைப் போன்றோர் அவரை பற்றி பேசிட என்ன அருகதை உள்ளது. 1967 லிருந்து தமிழ்நாட்டில் நடக்கும் திராவிட ஆட்சி தொடர்வதற்க்கு சின்னம்மா அவர்கள் அஇஅதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றால் மட்டுமே முடியும்!

தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி அம்மாவும், (கலைஞர் கருணாநிதியும்) கட்டிக் காத்திட்ட திராவிட சித்தாந்தத்தின் ( Dhiravidan Idiology ) ஆட்சி தமிழ் நாட்டில் தொடர வேண்டும் " என்று கூறப்பட்டுள்ளது.