இனியும் அமைதியாக இருக்க முடியாது..! ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதே ஆசை..!

தொடரும் போன் கால்..!கலையாமல் இருக்குமா அமமுக, அதிமுக..!
இனியும் அமைதியாக இருக்க முடியாது..! ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதே ஆசை..!

நாள்தோறும் அதிமுக மற்றும் அமமுக தொண்டர்களிடம் செல்போனில் உரையாடி வரும் சசிகலா, ஒரு ஒரு முறையும் தினம் ஒரு புதிய தகவல்களையும் வெளியிட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மறைந்த ஜெயலலிதாவை தாண்டி எம்.ஜி.ஆர்-க்கும் தான் ஆலோசனைகள் வழங்கியுள்ளதாகவும் கூறினார். 

சசிகலாவின் இந்த கருத்துக்கு பலரும் பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், தற்போது மேலும் ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது. சிவகங்கை சண்முகநாதன் என்பவரிடம் பேசிய சசிகலா, தொண்டர்கள் நீங்களே என்னை பொது செயலாளர் என்று  கூறிவிட்டீர்கள் நிச்சயமாக வருவேன் எனக் கூறியுள்ளார். 

நான் வரும்போதே கூறினேன் அனைவரும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று, ஆனால் அதை அவர்கள் கேட்கவில்லை எனக் கூறியுள்ள சசிகலா, ஒரு வேலை நான் ஓதிங்கிருந்தால் அவர்கள் வெற்றி பெற முடியும் என்று நினைத்தார்கள் அதற்காக தான் ஒதுங்கி இருந்தேன், ஆனாலும் அவர்கள் வெற்றி பெறவில்லை என்கிறார். 

தொண்டர்கள் கடிதங்கள் பல வந்து கொண்டிருப்பதாகவும், இதை பார்த்தும் இனி அமைதியாக இருக்க முடியாது எனக் கொந்தளித்துள்ள சசிகலா,  ஏனென்றால் அம்மா அவர்கள் கட்சியை எந்தளவு கஷ்டப்பட்டு கட்டி காப்பாற்றியதை சுட்டிக் காட்டியுள்ளார். 

இந்த பிரச்சனை பொழுது நாம் நிச்சயம் கட்சிக்கு வந்து அனைத்தையும் சரி செய்ய வேண்டும் எனவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்றி கொடுக்க வேண்டும் என்பது தான் என் ஆசை எனவும் கூறியிருக்கிறார். 

ஒரு ஒரு தொண்டரிடமும் சசிகலாவிடம் இருந்து பல விஷயங்களை கூறி வரும் நிலையில், இதனை சிறிதும் பொருட்படுத்தாது சில நிர்வாகிகள் திமுக பக்கம் சென்று வருகின்றனர். கூடிய விரைவில் சசிகலா செய்தியாளர்களை சந்திக்கயிருப்பதாக கூறப்படும் நிலையில், அவரது வருகையாலும் தரிசனத்திற்கு பின்னால் ஆவது அதிமுக, அமமுக டிக்கெட்கள் குறையாமல் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com