’பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த’ – அதிமுக-வை கைப்பற்ற தயாராகும் எடப்பாடி பழனிசாமி-சசிகலா  

சசிகலா, எடப்பாடி பழனாசமி என ஆளுக்கு ஒரு பக்கம் அதிமுகவை கைப்பற்ற காய்களை நகர்த்த தொடங்கி உள்ளதால், அரசியல் களமே பரபரப்பாக தகித்து போயுள்ளது.  
’பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த’ – அதிமுக-வை கைப்பற்ற தயாராகும் எடப்பாடி பழனிசாமி-சசிகலா   
Published on
Updated on
1 min read

சசிகலா, எடப்பாடி பழனாசமி என ஆளுக்கு ஒரு பக்கம் அதிமுகவை கைப்பற்ற காய்களை நகர்த்த தொடங்கி உள்ளதால், அரசியல் களமே பரபரப்பாக தகித்து போயுள்ளது.

அண்மைகாலமாக சசிகலா தனது தொண்டர்களுடன் பேசும் ஆடியோ வெளியாகி தமிழக அரசு களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக சசிகலா 8 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேசி நடந்தது குறித்து விரிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது வரை 8 எம்.எல்.ஏக்கள் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 மேலும் அவர் அவ்வபோது தொண்டர்களிடமும் பேசி தனது ஆதரவை பெருக்கி வருவதால், எடப்பாடி பழனிசாமி சற்று கலக்கத்தில் உள்ளார். இதனால் தனது ஆதரவாளர்களை அழைத்து பேசி வரும் அவர், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இவருக்கு ஆதரவாக, கருவாடு கூட மீன் ஆகலாம்.. ஆனால், சசிகலா அதிமுகவில் வர முடியாது" என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்திருந்தார்.. அதேபோல, "சசிகலாவை எந்த அதிமுக தொண்டனும் ஆதரிக்க மாட்டான்... அவர் அமமுகவினருடன் தான் தொடர்பில் இருக்கிறார்" என்று கே.பி முனுசாமியும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், சசிகலா தனது அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக தாம் தொடங்கிவிட வேண்டும் என எடப்பாடி தரப்பு திட்டமிட்டு இதற்காக ஓ.பி.எஸ்ஸையும் அழைத்துள்ளது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகவுள்ளது. இதனால் இனி அதிமுகவை கைப்பற்ற போவது யார் என்ற கேள்வியை அனைவரும் பேச தொடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com