பள்ளி மீது நிர்வாகியின் மனைவியே பாலியல் புகார்! வீடியோ வெளியாகி அதிர்ச்சி!!

சென்னை மடிப்பாக்கம் கலைமகள் வித்யா மந்திர் பள்ளி நிர்வாகிகள் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மீது நிர்வாகியின் மனைவியே பாலியல் புகார்! வீடியோ வெளியாகி அதிர்ச்சி!!

சென்னை மடிப்பாக்கம் கலைமகள் வித்யா மந்திர் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகிகள் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள கலைமகள் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ பள்ளியின் நிறுவனர் பெருமாள். இவர் இவரது வாரிசுகள் இப்பள்ளியின் நிர்வாகிகளாக உள்ளனர். இந்நிலையில் பெருமாள் மற்றும் அவரது மூத்த மகன் பால முருகன் ஆகியோர் மீது இளைய மகன் வெங்கட்ராமனின் மனைவி தேவி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவில் துணை ஆணையர் ஜெயலட்சுமியை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார்.

பின்னர் பேட்டியளித்த அவர், கலைமகள் வித்யா மந்திர் பள்ளியின் நிறுவனர் மற்றும் நிர்வாகிகளான பெருமாளும், பால முருகனும் சேர்ந்து பள்ளி ஆசிரியைகள், மாணவிகள் மற்றும் பள்ளியில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும், தான் அந்த பள்ளி நிர்வாகத்தில் பணியாற்றியபோது இது தெரியவந்ததாகவும் கூறினார்.

மேலும், தற்போது தனது கணவர் உடல்நலக் குறைவால் சமீபத்தில் உயிரிழந்துவிட்ட நிலையில் இவ்விருவரும் தனக்கும் பாலியல் தொந்தரவு கொடுப்பதோடு, இதை வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், இது பள்ளி நிர்வாகத்தினர் அனைவருக்கும் தெரிந்தாலும் மூடி மறைக்கவே முயல்கின்றனர் எனவும்,  பள்ளி மாணவிகளின் எதிர்காலத்தை கருதி தான் இந்த புகாரை தற்போது அளித்துள்ளதாகவும் கூறிய அவர், இதனால் தனது உயிருக்கும் தனது இரு பிள்ளைகளின் உயிருக்கும் ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பெருமாள் மற்றும் பால முருகனை விசாரித்தால் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் எனவும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு தேவையான அனைத்து ஆதாரங்களும் காவல் துறையினரிடம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com