டிஎன்பிஎஸ்சி தலைவராக விரைவில் டிஜிபி சைலேந்திர பாபு நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு துறைகளுக்கு ட்ஏவையான பணியாளர்களை நியமனம் செய்வதில் முக்கிய பங்காற்றி வரும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், நிரந்தர தலைவர் மற்றும் போதிய உறுப்பினர்கள் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பணியிடங்களை நிரப்பாவிட்டால் டிஎன்பிஎஸ்சி பணிகள் வரக்கூடிய நாட்களில் ஸ்தம்பிக்கும் என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்க : 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குட் நியூஸ்...நாளை முதல் ஆரம்பம்...!
இதற்கிடையில், ஏற்கனவே இந்த அமைப்பில் உள்ள 4 உறுப்பினர்களில் ஒருவர் தற்காலிக தலைவர் பொறுப்பை வகிக்கும் நிலையில், மீதமுள்ள 3 உறுப்பினர்களைல் ஒருவர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதனால் டிஎன்பிஎஸ்சி அமைப்பிற்கு நிரந்தர தலைவர் என்பதும் இல்லை; அத்துடன் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
இந்நிலையில், தமிழக டிஜிபியாக உள்ள சைலேந்திரபாபு, வரும் ஜூன் மாதம் டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். எனவே, விரைவில் டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபு நியமிக்கப்படுவார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், இவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிப்பதற்காகவே தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருப்பதாகவும் கருத்துக்கள் கூறப்படுகிறது.