பெண்களை வைத்து கசமுசா படம்..! காசைவைத்து சூதாட்டம்..! ஷில்பா ஷெட்டி கணவர் அரெஸ்ட்..!

வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை வைத்து ஆபாச படம்..!

பெண்களை வைத்து கசமுசா படம்..! காசைவைத்து சூதாட்டம்..! ஷில்பா ஷெட்டி கணவர் அரெஸ்ட்..!

பிரபல திரைப்பட நடிகையும், மாடலுமான ஷில்பா ஷெட்டி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப் படங்களில் நடித்து பிரபலமானவர். 1996-ம் ஆண்டு முதல் படங்களில் நடித்து வந்தவர், பல முறை தொழிலில் இருந்து புறக்கணிக்கப்பட்டாலும், மீண்டும் மீண்டும் தனது நடிப்பு மூலம் திறமையை நிரூபித்து வந்தார். மாஃபியாவுடன் தொடர்பு, இனவெறி சர்ச்சை உள்ளிட்ட பல சர்ச்சைகளில் சிக்கினார்.

கடந்த 2009-ம் ஆண்டு தொழில் அதிபர் ராஜ் குந்த்ரவை திருமனம் செய்து கொண்ட ஷில்பாவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், ஷில்பாவின் கணவரை மும்பை போலிசார் கைது செய்தனர். ஆபாச படங்களை எடுத்ததாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பார்ப்பதற்கு முன்பு யார் இந்த ராஜ் குந்த்ராவ் என்பதை அலசலாம். 

இந்திய பிரிட்டன் தொழிலதிபரான ராஜ் குந்த்ரா, கடந்த 2004-ம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் 198-வது பணக்காரராக இருந்தவர். ஜே.எல் மீடியா என்ற பெயரில் மொபைல் செயலியை நிறுவி அதல் வெப் சீரிஸ்களை தயாரித்து வருகிறார். மேலும் மும்பையில் கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் ராஜ். ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஒரு பங்குதாரராகவும் உள்ளார். தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து பிறகு கடந்த 2009-ம் ஆண்டு பாலிவுட் நடிகையான ஷில்பாவை திருமணம் செய்துக் கொண்டார். ஷில்பாவை திருமணம் செய்துக் கொண்ட பிறகு அவரது முதல் மனைவியான கவிதா ராஜ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

ஷில்பாவை திருமணம் செய்து கொள்வதற்காக முதல் மனைவியை வற்புறுத்தி விவாகரத்து பெற்றதாக கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த ராஜ், தன்னுடைய முதல் மனைவிக்கும், சகோதரியின் கணவருக்கும் தகாத உறவு இருந்ததால் தான் அவரை விவாகரத்து செய்ததாக விளக்கம் அளித்தார். இது ஒரு புறம் இருக்க, கடந்த ஆண்டு வெளிநாடுவாழ் இந்திய தொழிலதிபர் சச்சின் ஜோஷி என்பவர், ஷில்பா மீதும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீதும் பண மோசடி புகார் தெரிவித்தார். 2014-ம் ஆண்டு மும்பையை சேர்ந்த சத்யுக் என்ற தனியார் நிறுவனத்தில் தங்க சேமிப்பு திட்டத்தில் சேர்ந்ததாகவும், ரூ.18லட்சம் செலுத்திய அவருக்கு 5 ஆண்டுகள் முடிவில் தள்ளுபடி விலையில் தங்கம் வழங்கப்படும் எனக் கூறியதாக தெரிவித்துள்ளார். தற்போது அப்படி ஒரு நிறுவனமே இல்லை என்பதை கண்டு அதிர்ச்சியடைந்த சச்சின் ஜோஷி, அந்த நிறுவனத்தில் இயக்குநர்களாக இருந்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா மீது போலிசீல் புகார் அளித்தார். அதன் பேரில் இருவர் மீதும் வழக்குப் பதியப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது ஆபாச படங்களை எடுத்து வெளியிட்டதாக கூறி ஷில்பாவின் கணவர் ராஜ் குந்த்ராவை மும்பை போலிசார் கைது செய்துள்ளனர். தனது மொபைல் செயலியான ஜே.எல் மீடியாவில், நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை வைத்து ஆபாச படங்களை எடுத்து அதனை வெளியிட்டு வந்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் பதியப்பட்ட இந்த வழக்கின் விசாரணையில், ஆபாச படம் தயாரிப்பதில், பிரிட்டன் நிறுவனத்தின் பங்கு இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு, அதன் பின்னணியில் ராஜ் குந்த்ரா நிறுவனம் செயல்பட்டது தெரிவந்துள்ளது. 

அந்த பிரிட்டன் நிறுவன இயக்குநர் உமேஷ் காமத் நாள்தோறும் செயலிகள் மூலம் குறைந்தது 8 ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளனர். இவர் பதிவேற்றம் செய்யும் அபாய வீடியோக்களை மொபைல் போனில் பணம் கட்டி பார்க்கக் கூடிய செயலிகளில் மட்டுமே பார்க்க முடியும் அளவுக்கு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ராஜ் குந்த்ரா மீதான தவறு நிரூபணமானதால் அவருடன் சேர்த்து மாடலும், நடிகருமான கெஹானா வஷிஸ்த் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.