திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாஜகவுடன் இணக்கம் காட்டுவதாகவும், பிரதமர் மோடி தமிழகம் வருகை புரியும் போதெல்லாம் அவர்கள் காட்டும் இணக்கம் என்பது பல்வேறு கேள்விகளை எழ வைக்கிறது....
பாஜகவை எதிர்ப்பதை வழக்கமாக கொண்ட திமுக:
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டுக்கு முன்பு பாஜகவை எதிர்ப்பதையே வழக்கமாக கொண்ட திமுக, பிரதமர் மோடி எப்போது தமிழகம் வந்தாலும் “GO BACK MODi" என்ற HASHTAG - ஐ டிரெண்டிங் ஆக்குவதையும், கருப்பு கொடி கட்டுவதையும் வழக்கமாக கொண்டிருந்தது.
பாஜகவுடன் நெருக்கமா?:
ஆனால், கடந்த 2021 ஆம் ஆண்டு பிறகு ஆட்சி கட்டிலை பிடித்த திமுக, பாஜக குறித்த விவகாரங்களில் மென்மையாக கையாள்வதாக ஒரு பிம்பம் தோன்றியது. அதற்கேற்றார் போல், கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில், பிரதமர் மோடிக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இடையே இருந்த இணக்கம் என்பது மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியது.
மறுப்பு தெரிவித்த ஸ்டாலின்:
அதேபோல், பிரதமரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொள்ள இருந்தார். அப்போது டெல்லிக்கு சென்று பாஜகவுடன் நெருக்கம் காட்ட நினைக்கிறாரா ஸ்டாலின்? அவர் பிரதமரை சந்திப்பதற்கு இடையில் பல அரசியல்கள் ஒழிந்திருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் நிலவி வந்தது. அதற்கெல்லாம் பதில் கொடுக்கும் விதமாக, ”டெல்லிக்குக் காவடிதூக்க ஒன்றும் செல்லவில்லை. மத்திய அரசுடன் மாநில அரசு உறவு கொள்ளுமே தவிர, திமுகவுடன் பாஜகவுக்கு எந்த உறவும் இல்லை” என விசிக கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் ஸ்டாலின் தெரிவித்தார். இருப்பினும் அவர்கள் இரண்டு பேரின் நெருக்கம் என்பது அரசியல் வட்டாரங்களில் சந்தேகத்தை தான் மீண்டும் மீண்டும் எழுப்பியது.
வெள்ளை நிற குடை எதை குறிக்கிறது:
இந்நிலையில், நேற்று திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து மதுரை வந்த பிரதமர் மோடியை, முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்க சென்றார். அப்போது, பிரதமருக்கு வெள்ளை நிற குடையை பிடித்திருந்தனர். திமுகவின் அடையாளமே அவர்களின் கருப்பு கொடி, ஆனால் அவர்கள் எதிர்க்கும் பாஜகவுக்கு வெள்ளை நிற குடையை விரித்திருப்பது அவர்களுடைய சமரசத்தை குறிக்கிறதா? என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
வழிநெடுகிலும் திமுக கொடியை கட்டியது ஏன்?:
அதேபோல், மதுரை விமான நிலையத்திலிருந்து காரில் சென்ற பிரதமருக்கு வழிநெடுகிலும் திமுக கொடியை கட்டி வரவேற்றது ஏன்? பாஜக கொடியை தவிர்த்து வழிநெடுகிலும் திமுக கொடியை கட்டியது மட்டுமட்டுமல்லாமல், 3 கொடிக்கு இடையில் ஒரு பாஜக கொடியை கட்டி, அதுவும் அதிக இடைவெளி விட்டு கட்டிருப்பது கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்றாக மாறியிருக்கிறது. அதே சமயம், “GO BACK MODi" என்ற HASHTAG -க்கு பதிலாக “VANAKKAM MODI" என்ற HASHTAG டிரெண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்த பின்னணியில், ஆட்சிக்கு முன்னர் பாஜகவிடம் முழு எதிர்ப்பை காட்டி வந்த திமுக, ஆட்சிக்கட்டிலை பிடித்த பிறகு இணக்கம் காட்டி வருவது, முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டணி மாறுகிறாரா? என்று அரசியல் வல்லுனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.