பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த கோத்தபய ராஜபக்சே பிறப்பித்துள்ள உத்தரவு!

பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த கோத்தபய ராஜபக்சே பிறப்பித்துள்ள உத்தரவு!
Published on
Updated on
1 min read

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிகாரிகளுக்கு உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் அதிபர் அலுவலகத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி எரிவாயு கப்பல் இன்று பிற்பகல் இலங்கைக்கு வந்தவுடன் எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

3700 மெற்றி தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று பிற்பகல் 3 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக அந்த கப்பல் இலங்கையை வந்தடைய தாமதமாகியுள்ளது.

அதேவேளை நாளைய தினமும் மற்றும் எதிர்வரும் 16ஆம் திகதியும் மேலும் 3700 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நேற்று அதிபர் மற்றும் பிரதமரை பதவி விலகக் கோரி மாபெரும் போராட்டங்கள் பதிவாகியிருந்த நிலையில் அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம் என்பன போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தன.

இந்த நிலையில் எதிர்வரும் ஜூலை 13ஆம் தேதி தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com