இஸ்ரேல் உருவான கதை...யூதர்கள் உருவாக்கிய நாடு...!

உலகம் முழுவதுமிருந்து விரட்டியடிக்கப்பட்ட யூதர்கள் ஒன்றிணைந்து எப்படி இஸ்ரேலை உருவாக்கினார்கள் என்ற வரலாற்றை இந்த செய்திக்குறிப்பில் பார்க்கலாம்.

பாலீஸ்தானத்தில் பல நூற்றாண்டுகளாக அரேபியர்கள் வாழ்ந்த பகுதியை யூதர்கள் ஆக்கிரமித்து இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் பாலஸ்தீனம் உண்மையில் யூதர்கள் வாழ்ந்த நிலப்பரப்பு என்றும், கி.பி 3-ஆம் நூற்றாண்டு வரை அங்கு யூதர்களே பெரும்பான்மையாக வாழ்ந்து வந்ததாகவும் இஸ்ரேல் உரிமை கோறுகிறது. 

13-ஆம் நூற்றாண்டின் மத்தியில் பாலஸ்தீன நிலப்பரபில் இஸ்லாமியர்களே பெரும்பான்மையாக இருந்துள்ளனர். அரபு மொழியே ஆதிக்க மொழியாக இருந்து வந்துள்ளது. ஆனால் 1918ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படைபெடுப்புக்கு பிறகு பாலஸ்தீனத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தது. முதல் உலகப்போருக்கு பிறகு ஐரோப்பாவில் வசித்த யூதர்கள் மீது ஹிட்லர் நடத்திய இன படுகொலையால், யூதர்கள் நாடு முழுவதும் சிதறி அகதிகளாகவும், நாடோடிகளாகவும் வாழ தொடங்கினர். தங்களுக்கென்று ஒரு நாடு இல்லாமல் அடையாளம் இன்றி தவித்து வந்தனர். இதனிடையே உலகம் முழுவதும் உள்ள யூதர்களை ஒன்றிணைக்க பாலஸ்தீனத்தில் ஒரு யூத அமைப்பு உருவாகியது. அந்த அமைப்பின் முயற்சியால் உலகம் முழுவதும் சிதறி வாழ்ந்த யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேற தொடங்கினர். இதற்கு பிரிட்டன் பேருதவியாக இருந்துள்ளது. யூத குடியேற்றத்தை தொடர்ந்து அரேபியர்கள் மற்றும் யூதர்களிடையே பதற்றம் தொடங்கியது. 

1920, 1929 மற்றும் 1936 ஆம் ஆண்டுகளில்  யூதர்கள் மற்றும் பாலஸ்தீனர்களிடையே கடும் வன்முறை வெடித்தில், வலிமை மிக்க யூத ராணுவத்தை பாலீஸ்தீனியர்கள் எதிர்கொள்ள முடியாமல் தவித்து வந்துள்ளனர். எனினும் வலுவான மேற்கத்திய நாடுகளின் ஒத்துழைப்பு காரணமாக உலகிலுள்ள யூதர்களில் 48 சதவீதம் பேர் பாலஸ்தீனத்தில் குடியேறிய நிலையில், 1948-ஆம் ஆண்டு மே14 ஆம் தேதி பாலீஸ்தீன பகுதிக்கு நடுவே இஸ்ரேல் தன்னை சுதந்திர நாடாக அறிவித்து கொண்டது. இதனை ஐநாவும் அங்கீகரித்தது.  இதற்கு அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்தியாவும் எதிர்த்துள்ளது. 

அதனை தொடர்ந்து 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் மீது எகிப்து, சிரியா, ஈராக், லெபனான் போன்ற நாடுகள் கூட்டாக 6 நாட்கள் தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் தனி நாடாக போரிட்டு, அரபு நாடுகளுக்கு மத்தியில் தன்னை வலிமைமிக்க தேசமாக நிலை நிறுத்தியது. ஒருபுறம் பாலஸ்தீனியர்கள் நிலத்தை பறிகொடுத்து வறுமையால் வாடும் நிலையில், மற்றொருபுறம் அறிவியல். தொழில் நுட்பம், பொருளாதாரம், கல்வி என தன்னை ஒரு வளர்ச்சியடைந்த நாடாக இஸ்ரேல் உருவாக்கி கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பல உடன்படிக்கைகள் ஏற்பட்டாலும் கூட, பாலஸ்தீனம் என்னும் தங்கள் தேசத்தின் இதயத்தை பிளந்து இஸ்ரேல் என்னும் ஒரு நாடு உருவாக்கப்பட்டதை பாலஸ்தீனியர்கள் இன்று வரை ஏற்றுக்கொள்ள வில்லை.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com