என்கவுண்டர் லிஸ்டில் 42 ரெளடிகள்.,பிரபல நடிகரோடு தொடர்பு.,திருச்சி தேஜஸ் சுவாமி கைதின் பின்னணி என்ன.?

என்கவுண்டர் லிஸ்டில் 42 ரெளடிகள்.,பிரபல நடிகரோடு தொடர்பு.,திருச்சி தேஜஸ் சுவாமி கைதின் பின்னணி என்ன.?

திருச்சி மாவட்டம், அல்லித்துறையை அடுத்த கன்னியம்மன் கோயில் அருகில் வசித்துவருபவர் பாலசுப்பிரமணியன் என்கிற தேஜஸ் சுவாமிகள். அவர், தன்னைத் சாமியார் என்று சொல்லிக்கொண்டு அந்த பகுதியில் பிரபலமாக வலம்வருகிறார். 

இந்நிலையில், இந்த தேஜஸ் சுவாமி, திருச்சியிலுள்ள ஒரு வழக்கறிஞருடன் பேசிக்கொள்ளும்  ஆடியோ கடந்த வாரம் வெளியானது. அதில், தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மேலும் அரசின் உயரதிகாரிகளும் என்னை நாள்தோறும் சந்தித்துவிட்டுச் செல்கிறார்கள். மேலும்,தமிழகத்தில் 42 ரெளடிகள் கொண்ட லிஸ்ட்டை போலீஸார் கையில் எடுத்திருக்கிறார்கள். அதில், டெல்டா மாவட்டங்களில் மட்டும் 12 ரெளடிகள் என்கவுன்ட்டர் லிஸ்ட்டில் இருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் என்கவுன்ட்டர் நடக்கலாம். திருச்சியைச் சேர்ந்த முக்கிய ரெளடிகள் சிலர், என்னை வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள். சைரன் வைத்த காரில் சென்று அமைச்சர் சேகர் பாபுவை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன்" என்று கூறியிருந்தார். 

அதன் பின்னர்  இந்த ஆடியோ இணையத்தில் வைரலானது. இதைக் கேட்ட பலர் இந்த ஆள் என்ன உண்மையில் சாமியாரா அல்லது ரௌடியா? இத்தனை ரௌடிகளுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று பேசி வந்தார்கள். 

அதைத் தொடர்ந்து தேஜஸ் சாமியை திருச்சி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் கூறுகையில், தேஜஸ் சுவாமியுடன் திருச்சியிலுள்ள சிட்டிங் எம்.எல்.ஏக்கள் சிலர் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் தேஜஸ் சுவாமிகள் நடத்தும் யாகத்திலும் கலந்துகொண்டிருக்கிறார்கள். அதோடு திருச்சியில் முக்கிய நடிகர் ஓருவரும் இவரோடு தொடர்பில் இருக்கிறார். இவர்களைப் போல பலரும் சாமியாரோடு தொடர்பில் இருக்கிறார்கள்.

ரெளடிகளுடன் இவருக்குத் தொடர்பு எப்படி வந்தது? அவர்களை பயன்படுத்தி எதுவும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளாரா? என்பது பற்றி விசாரித்து வருகிறோம். தற்போது இந்த சாமியார் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மூன்று பேரை கைதுசெய்திருக்கிறோம்