எதிர்கட்சிகளின் பாலை தூக்கி அடித்த உதயநிதி..! மறைந்த அனிதாவின் குடும்பத்துடன் சந்திப்பு..!

மறைந்த அனிதாவின் குடும்பத்தை சந்தித்த ஸ்டாலின்..!

எதிர்கட்சிகளின் பாலை தூக்கி அடித்த உதயநிதி..! மறைந்த அனிதாவின் குடும்பத்துடன் சந்திப்பு..!
அனிதா.. நமது மூளையில் எங்கோ ஒளிந்திருக்கும் பெயர்களில் ஒன்று. அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள். 12-ம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் பெற்றவளால் மருத்துவராக முடியாமல் போனது. இன்று கொரோனாவைப் போல அப்போது திடீரென மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நீட் தேர்வில் 700-க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் மருத்துவக் கனவை விட்டுக் கொடுக்க மனமில்லாமல் தனது உயிரையே மாய்த்துக் கொண்டவள் அனிதா.

 
இவள் மறைந்து மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையிலும், இன்று வரை நமது அரசால் நீட் தேர்வை எதிர்த்து நிலையான முடிவினை பெறமுடியவில்லை. அனிதாவிற்கு பிறகு அடுத்தடுத்து பல மரணங்கள். ஒவ்வொரு ஆண்டும் அவளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் போது கூடவே பல மாணவர்களும் தங்களை மாய்த்துக் கொண்டே வந்தனர். 
 
இப்போது நமக்கு திடீரென அனிதாவின் நினைப்பு வருவதற்கு காரணம் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின். தேர்தல் பிரசாரத்தின் போது கூட,  அனிதாவை அதிக இடங்களில் முன்னிலைப்படுத்தி பேசினார் உதயநிதி. அனிதாவின் இறப்பிற்கு காரணம் ஓபிஎஸ், இபிஎஸ் என மேடைக்கு மேடை அழுத்தம் திருத்தமாக குற்றம்சாட்டி வந்தார். தேர்தல் அறிக்கையில் திமுக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. 

இந்த அறிவிப்பு அவர்களுக்கு வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியது என்றே கூறலாம். அரியலூர் எப்போது சென்றாலும் குழுமூரில் உள்ள அனிதாவின் நினைவு நூலகத்திற்கு சென்று விடுவார் உதயநிதி. அங்குள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட புத்தகங்களை அனிதா நினைவு நூலகத்திற்கு வரும் மாணவர்களுக்கு பரிசாக அளிப்பார். பிறகு அனிதாவின் வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் இரங்கல் தெரிவித்தார் உதயநிதி. 

கடந்த சில தினங்களாக நீட் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் எனக் கூறிய திமுக, தற்போது பயிற்சி நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. நீட் தேர்வால் வரும் பிரச்னைகள் குறித்து விசாரிக்க குழு அமைத்துள்ளதாக கூறுகிறது. இதனால் இந்த வருடம் நீட் தேர்வு வருமா? வரதா? என்பதில் மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் அன்பில் மகேஷ், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நீட்தேர்வு குறித்த முக்கிய முடிவுகளை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றார். 

இப்படி பரப்பராக உள்ள சூழலில், அனிதாவின் சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தினர் உதயநிதியை சந்தித்து பேசியுள்ளனர். அனிதவின் பெயரில் இயங்கி வரும் நூலகத்தை திறன் மேம்பாட்டு மையமாக தரம் உயர்த்த கோரி கோரிக்கை விடுத்தனர். அப்பணியை இணைந்து செய்வோம் என உதயநிதி உறுதியளித்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.