10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும்...

10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என மொபைலுக்கு வரும் மெசேஜ் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும்...
Published on
Updated on
1 min read

10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என மொபைலுக்கு வரும் மெசேஜ் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மைகாலமாக செல்போன்களில் வரும் மெசேஜ்கள் மூலம் மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்து வருகின்றனர். அந்த வகையில், 10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என மொபைலுக்கு வரும் மெசேஜ் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு கிளிக் செய்து விபரங்களை பதிவிடுவதன் மூலம் மோசடி கும்பல் பணத்தை திருடி வருகின்றனர். அதனால் இது போல் வரும் மெசேஜை யாரும் நம்பவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பணமோசடி அதிக அளவு நடைபெற்று வருவதால் இந்த எச்சரிக்கை பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com