பொருளாளருக்குத் தான் அதிகாரமா? வைத்திலிங்கம் புதிய தகவல்!

சென்னை அடுத்த வானகரத்தில் கடந்த மாதம் 23-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தப் பொதுக்குழு முழுமையாக நடைபெறாததால் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் நாள் நடைபெறும் என அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.
பொருளாளருக்குத் தான் அதிகாரமா? வைத்திலிங்கம் புதிய தகவல்!
Published on
Updated on
1 min read

அதிமுக பொருளாளருக்குத் தான் சின்னம், கட்சியை வழிநடத்தும் அதிகாரம் உள்ளது என முன்னாள் அமைச்சரும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

அதிமுகவில் ஒன்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் சென்னை அடுத்த வானகரத்தில் கடந்த மாதம் 23-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தப் பொதுக்குழு முழுமையாக நடைபெறாததால் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் நாள் நடைபெறும் என அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுக்குழு கூட்டத்தில் இருந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர். 

இந்நிலையில், சென்னையை அடுத்த வானகரத்தில் வரும் 11 ஆம் நாள் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, பொதுக் குழு கூட்டத்திற்கு அழைப்பிதழ் அனுப்பி அனைத்து ஏற்பாடுகளை செய்தாலும், வரும் ஜுலை 11 ஆம் நாள் பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை என வைத்திலிங்கம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சர்வாதிகார மனநிலையோடு செயல்படுவதாக விமர்சித்துள்ள அவர்,  தலைமைக் கழகம் அழைப்பு என்ற பெயரில் அதிமுக பொதுக்குழுவுக்கு அழைப்பிதழ் அனுப்புவது ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com