
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் உயிரிழந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர்கள் உறவினர்கள் கடந்த நாட்களாக சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று ஆயிரக்கணக்கானோர் அந்தத் தனியார்ப் பள்ளியின் முன்பு இறந்த மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தக் கூடியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது போலீஸ் தடியடி நடத்தியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் திருப்பித் தாக்கியதாக கூறப்படுகிறது