விரைவில் டிடிவியின் அமமுக கலைப்பு: சசிகலா தடலடி முடிவு!!!

அதிமுகவில் இணைய டிடிவி தினகரனின் அமமுக இடையூறாக இருப்பதால் அமமுகவை கலைக்க சசிகலா உத்தரவிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
விரைவில் டிடிவியின் அமமுக கலைப்பு: சசிகலா தடலடி முடிவு!!!

அமமுகவை தொடங்கிய தினகரன் கடந்த நாடாளுமன்ற மற்றும்  சட்டமன்ற தேர்தல் என இரண்டிலும் படுதோல்வியை சந்தித்துள்ளார்.அதிமுகவை கைப்பற்றுவது மட்டும் இல்லாமல் ஒன்றுப்படுதுவதுதான் தனது லட்சியம் என சசிகலா அறிவித்துள்ளார். அதிமுக ஜானகி அணி மற்றும் அதிமுக ஜெயலலிதா அணி இரண்டாக பிரிந்தபோது இரண்டையும் ஒன்றினைத்து அதிமுகவை ஒன்றாக்கி நீதிமன்றத்தின் மூலம் இரட்டை இலையை மீட்டது ஜெயலலிதாவின் இமலாய சாதனையாகும் என பேசப்பட்ட நிலையில்,

 அதிமுக ஒன்றுப்பட்டதால் திமுகவை வீழ்த்தி சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற செய்து தமிழகத்தில் ஆட்சியை பிடித்து முதல்வர் பதவியை பிடித்தார் ஜெயலலிதா.அதே பாணியில் அதிமுகவை ஒன்றினைக்க சாணக்கியதனமாக முடிவெடுத்துவிட்டார் சசிகலா.

அதிமுக ஒன்றுபட தடையாக இருப்பது அமமுக தான், இதனால் அமமுகவை கலைத்துவிட்டால்,அதிமுக ஒரே கட்சியாகிவிடும்.அமமுகவை கலைத்தால் சசிகலாவின் இமேஜ் உயர்ந்துவிடும் என்றும் இதற்கு முதல்கட்டமாக தினகரனை அமைதியாக இருக்கும்படியும் அமமுக செயல்பாட்டை நிறுத்துப்படியும் உத்தரவிட்டுள்ளராம்.

இதன் காரணமாக சென்னையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்திற்கு தினகரன் வருவதை நிறுத்திவிட்டராம். அமமுக செயல்பாடு இல்லாததால் முக்கிய நிர்வாகிகள் அமமுகவுக்கு முழுக்குபோட்டுவிட்டு திமுகவுக்கு ஜக்கியம் ஆக்கிவிட்டார்.இதை தடுத்து நிறுத்துவதற்கு ஒரே வழி அமமுகவை கலைப்பதுதான்.சசிகலா ஆதாரவளர்களும் அதிமுக தலைமையும் ஒன்றினைவது குறித்து ரகசிய ஆலோசனை நடத்தினார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக பிளவுப்பட்டே இருந்தால் திமுகவை எந்த காலத்திலும் எதிர்க்க முடியாது இதை நம்பும் சசிகலா அதிமுக இணைப்புக்கு தயாரகிவிட்டார்.விரைவில் அதிமுக சசிகலா இணையும் விழா கோலாகலமாக நடைபெறும் என அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளிவந்துள்ளன.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com