உலகின் சிறந்த கொரோனா தடுப்பூசி எது?

உலகின் சிறந்த கொரோனா தடுப்பூசி எது?

கொரோனாவுக்கு எதிரான பேரில், உலகில் எந்த நாட்டின் தடுப்பூசி சிறந்த முறையில் பயன்படுகிறது என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.

கடந்த ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து கிளம்பிய கொரோனா வைரஸ் ,அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், போன்ற உலக நாடுகளை அச்சுறுத்தியது. லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவுக்கு பலியாகினர்.

இதைத்தொடர்ந்து தற்போது கொரோனா தொற்றின் 2-வது அலை வேமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் ஓராண்டுக்கும் மேலாகப் பெரும் சவாலாக இருக்கும் கொரோனா தொற்றைச் சமாளிக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன.

இதில், சீனா தயாரித்துள்ள சினோவேக் தடுப்பூசி 50 சதவீதமும் சினோபார்ம், 79 சதவீதமும் வேலை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதில் சினோவேக் 2 டோஸாக 14 நாட்கள் இடைவெளியிலும், சினோபார்ம், 2 டோஸாக 21 நாட்கள் இடைவெளியிலும் எடுத்துக் கொள்ள வேண்டும், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி 81 சதவீதம் வேலை செய்யும் நிலையில், இதனை 28 நாட்கள் இடைவெளியில் 2 டோஸாக எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் oxford-AstraZeneca தடுப்பூசி 82 சதவீதம் பலனளிக்கும் நிலையில், இதனை 12 வார இடைவெளியில் 2 டோஸாகவும், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5, 91 சதவீதமும் பலனளிக்கும் நிலையில், அதனை 21 நாட்கள் இடைவெளியில் 2 டோஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும்

ஒரு டோஸ் மட்டுமே போதும் என தெரிவிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி 72 சதவீதமும்,  28 நாட்கள் இடைவெளியில் 2 டோஸாக எடுத்துக்கொள்ளும் Moderna 94 சதவீதமும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், Pfizer தடுப்பூசி 95 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை நோயாளிகளுக்கு கைகொடுப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த தடுப்பூசியை 2 டோஸாக 21 நாட்கள் .இடைவெளியில் செலுத்திக் கொள்ள வேண்டுமாம். உலக நாடுகளின் தடுப்பூசிகளில் அமெரிக்காவின் Pfizer சிறந்தது என கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.