கூகுள் லோகோவில் இருக்கும் அந்த அன்னா மணி யார்?

இன்று பிசிசிஸ்ட் அன்னா மணிக்கு பிறந்தநாள். அவரது 104 பிறந்தநாளுக்காக, கூகுள் நிறுவனம், டூடுள் செய்துள்ளது. யார் இந்த அன்னா மணி என்று பார்க்கலாம்.

கூகுள் லோகோவில் இருக்கும் அந்த அன்னா மணி யார்?

கூகுள் நிறுவனம் எப்போதும், பிரபல மக்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களுக்கு மரியாதை நிமித்தமாக டூடுள் செய்வது வழக்கம். அவ்வகையில் இன்று, பிரபல இயற்பியலாளர் மற்றும் வானிலை ஆய்வாளரான அன்னா மணியின் 104வது பிறந்தநாளை ஒட்டி, டூடுள் செய்து கௌரவித்துள்ளது. மேலும், ‘இனிய 104வது பிறந்தநாள் வாழ்த்துகள் அன்னா மணி! உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்தவை தான் இன்று பிரகாசமான நாட்களை உருவாக்க உலகையே ஊக்கப்படுத்தியுள்ளது’ என வாழ்த்துகளும் தெரிவித்துள்ளது. அப்படிப்பட்ட அன்னா மணி பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்!

பீரமேடு விஞ்ஞானி:

இந்தியாவில், பெண்கள் அதிகமாக படிக்க அனுமதிக்கப்படாத காலத்தில், முதல் பெண் விஞ்ஞானியாக, இயற்பியல் துறையில் வெற்றிக் கொடிக்கட்டியவர் தான் அன்னா மணி. கேரள மாநிலம் திவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள பீரமேடு பகுதியில் , 1918ம் ஆண்டு, ஆகஸ்ட் 23ம் தேதி பிறந்தார். சிவில் இஞ்சினியரான தந்தைக்கு, மொத்தம் எட்டு குழந்தைகள். இவர் ஏழாவதாக பிறந்தார்.

காதி மேல் பிரியம்:

அதிகமாக படிப்பில் ஆர்வம் செலுத்திய அன்னா, வைகோம் சதியாகிரகத்தில் மகாத்மா காந்தியின் செயல்கள் மீது ஆர்வம் திரும்பி பெரிதாக ஈர்க்கப்பட்டார். தேசியவாதி இயக்கங்கள் மீது ஆர்வம் கொண்டு, காதி உடைகளை அணிய துவங்கினார். சிறு வயதிலேயே இவ்வளவு மெசூர்டாக யோசிக்கிறார் என பலராலும் வியக்கப்பட்ட அன்னாவிற்கு, மருத்துவம் சேர்ந்து படிக்க ஆசை இருந்திருக்கிறது.

இயற்பியலுக்கு மாற்றம்:

அன்றைய மெட்ராஸ் மகளிர் கிருஸ்துவ கல்லூர்யில் (WCC) தனது இடைநிலை அறிவியல் பட்டத்தை முடித்த அன்னா, மருத்துவம் துறையில் சேரவில்லை. ஏன் என்றால், அவருக்கு இயற்பியல், அதாவது Physics மீது ஆர்வம் அதிகரித்தால், இயற்பியல் துறையில் சேர்ந்து தனது சிறப்புத்தன்மையை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். மெட்ராஸ் ப்ரெசிடென்சி கல்லூரியில் 1939ம் ஆண்டு, இயற்பியலில், மற்றும் வேதியியலில் B.Sc Honors பட்டப்படிப்பு முடித்தார்.

ராமனும் அன்னாவும்:

பட்டத்தை ஒரு கையில் பெற்றது, மறுகையில், வேலையும் கிடைத்தது அன்னாவிற்கு. தான் படித்த WCC கல்லூரியிலேயே ஒரு வருடம் ஆசிரியராக மாணவர்களுக்கு கற்பித்தார். இதனைத் தொடர்ந்து, பெங்களூரில், இண்டியன் இன்ஸ்டிடுட் ஆஃப் சயன்ஸ்-இல் முதுகலை படிக்க, அவருக்கு, உதவித் தொகையும் கிடைத்தது. பின், பூஜியத்தைக் கண்டுபிடித்து, உலகிற்கு இந்தியாவின் கணக்கு திற்னகளைக் காட்டிய, நோபல் பரிசு பெற்ற, சர் சி வி ராமனிடம் பணி புரியும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

ஒரே ஒரு குறை:

அதனால், அவரிடம் வேலை செய்து, “ஸ்பெக்ட்ரோஸ்கோபி” படித்து, ரூபி மற்றும் வைரம் ஆகிய கற்களின் தன்மைகளை ஆராய்ச்சி செய்த நிலையில், 1942இல் இருந்து 1945 வரை, கிட்டத்தட்ட 5 ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்த பின்னும், அவருக்கு பி.எச்.டி பட்டம் வழங்கப்படவில்லை. அவரது ஆராய்ச்சிகளில் எந்த குறையும் இல்லை. ஆனால், அவரிடம் இயற்பியல் துறையில் முதுகலை பட்டம் இல்லாதது தான் குறையாக இருந்தது.

தலைமை தாங்கிய முதல் பெண்:

இதனைத் தொடர்ந்து, இயற்பியலில் மேலும் படிக்க, பிரிட்டேன் சென்ற அன்னா, அங்கு வானியல் கருவிகள் மீது ஆர்வம் கொண்டதால் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் அது பற்றிப் படிக்க துவங்கினார். படிப்பு முடிந்தது, 1948இல் இந்தியா திரும்பிய நிலையில், பூனேவில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இணைந்தார்.

பிரிட்டெனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து வானிலை ஆய்வு கருவிகளையும் ஏற்பாடு செய்வது அன்னாவின் பொறுப்பாக இருந்தது. அவரது திறனை உணர்ந்த மையம், 1953இல், சுமார் 121 ஆண்கள் கொண்ட பிரிவிற்கு, அவரை தலைமை தாங்க வைத்தது.

இண்டிஜீனஸ் தேவை:

முதன் முறையாக, ஆண் ஆதிக்கம் கொண்ட துறையில் ஒரே பெண்ணாகவும், முதல் பெண்ணாகவும், அதுவும் தலைமை பொறுப்பிலும் இருந்த அன்னா, அனைவரையும் தனது திறன் மூலம் வியக்க வைத்தார். ஆனால், அன்னாவின் மனதில் வேறு ஓடிக்கொண்டிருந்தது. இந்தியாவிலேயே சொந்த கருவிகளைத் தயாரிக்க வேண்டும் என்ற முனைப்பு அவருக்குள் தோன்றியது.

சுமார் 100க்கும் மேற்பட்ட வானியல் ஆய்வு கருவிகளை தானே செய்தார். 1957-58களில் சூரிய கதிர்களை அளவிடுவதற்காக, தொடர் நிலையங்களை நிறுவினார். சிறிய நிலையங்களில், காற்றின் வேகத்தையும், சூரிய சக்தியையும் அளவிடுவதற்காக கருவிகளைத் தயாரிக்கத் துவங்கினார். பின், ஒசோன் பரப்பையே அளவிட கருவி உருவாக்கியதால் சர்வதேச ஒசோன் சங்கத்தில் உருப்பினராக சேர்க்கப்பட்டார்.

கருவியைத் தந்த அன்னா:

இன்று நாம் ஓசோனை அளவிடப் பயன்படுத்தும் கருவியைத் தந்ததே அன்னா தான். இந்த படைப்புகளுக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்த அன்னா மணி, திருமணமே செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தில் துணை இயக்குநர் ஜெனரலாக பணி புரிந்து, பின், 1976 இல் ஓய்வு பெற்றார். கடந்த 2001ம் ஆண்டு, நம்மை விட்டு பிரிந்தார் அன்னா மணி.

இவரது 100வது பிறந்தநாளில், இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், இவரது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக வெளியிட்டு கௌரவப்படுத்திய நிலையில், தற்போது, 104வது பிறந்தநாளை கௌரவிக்கும் வகையில், கூகுள் டூடுள் வெளியிட்டுள்ளது. இந்தியர்களுக்கு, குறிப்பாக் இந்திய பெண்களுக்கு, அக்காலத்திலேயே பெரும் இன்ஸ்பிரேஷனாக இருந்த அன்னா மணியை இந்த நாளில் நினைவு கூர்வோம்.

--- பூஜா ராமகிருஷ்ணன்