மார்கரெட் ஆல்வா யார் ?

மார்கரெட் ஆல்வா யார் ?

1942ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தின்  மங்களூரில் பிறந்தவர்  மார்கரெட் ஆல்வா.  

மாநிலங்களவை:

ஏப்ரல் 1974 இல், ஆல்வா காங்கிரஸின் பிரதிநிதியாக மாநிலங்களவைக்குத்  தேர்ந்தெடுக்கப்பட்டார்.  பின்னர் 1980, 1986 மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில் மேலும் மூன்று முறை  தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மாநிலங்களவையில்  இருந்த காலத்தில், மாநிலங்களவைத்  துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர்கள் ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் ஆகியோரது அமைச்சரவையில்  மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒரு பிரிவான இளைஞர் மேம்பாடு  மற்றும் விளையாட்டு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகங்களில் மத்திய இணை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

மக்களவை:

ஆல்வா 1999 இல் உத்தர கன்னட தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 13 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.  2004ல் நடைபெற்ற  தேர்தலில் போட்டியிட்டு  முயற்சியில் தோல்வியடைந்தார். 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஆல்வா அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 

ஆளுநர்:

கோவா, ராஜஸ்தான், குஜராத் மாநிலத்திலும் ஆளுநராக இருந்துள்ளார். கடைசியாக உத்தரகாண்ட் ஆளுநராக இருந்த அவர், 2014ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.   கடந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும் மார்கரெட் ஆல்வா இருந்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குடியரசு துணை தலைவர் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல்  செய்ய இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த  நிலையில், இன்றைய தினம் மார்கரெட் ஆல்வா குடியரசு துணை தலைவர் வேட்ப்பாளராக வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார் .