ஆறுதல் வெற்றி பெறுமா இங்கிலாந்து?

ஆறுதல் வெற்றி பெறுமா இங்கிலாந்து?

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி இருபது ஓவர் போட்டியில் வெற்றி பெறும் முனைப்போடு இரு நாட்டு அணி வீரர்களும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டிரென்ட் பிரிட்ஜில் நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.  இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்தை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா ஆதிக்கம் செலுத்தியுள்ளது. நேற்றை ஆட்டத்தில், 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 17 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கிடையில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். முதலில் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்திருந்தது.  ரவீந்திர ஜடேஜா 29 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி டி-20 போட்டியிலாவது வெற்றி பெறும் முனைப்புடன் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தொடங்கியுள்ளது.  

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com