எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கமா?

எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கமா?

அதிமுகவின் சட்டப்பேரவை எதிர்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்குவது தொடர்பாக உரிய விளக்கம் கேட்கப்பட்ட பின்னரே சபாநாயகர் இறுதி முடிவெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் அதிமுக சார்பாக எதிர்கட்சித் தலைவராக  எடப்பாடி பழனிச்சாமியும் துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் இருக்கும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தற்காலிக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுதொடர்பாக அதிமுக சார்பாக சட்டப்பேரவைக்கும் கடிதம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுக சட்டப்பேரவைக் குழுவை மாற்றக் கூடாது எனக்கூறி சட்டப்பேரவைத் தலைவருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். பொதுக்குழு சம்பந்தமாக நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் இருப்பதால் மனுக்கள் அனுப்பினால் அதனை நிராகரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.