புதுக்கோட்டை, சின்னப்பா நகர் 5ஆம் வீதியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில்.. இவரது மனைவி ஷர்மிளா.
முகமது இஸ்மாயில் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், ஷர்மிளா தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா:
தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதையறிந்த ஷர்மிளா, கடந்த 25ம் தேதி தனது தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து இன்று மாலை வீட்டிற்கு வந்த அவர் வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
போலீசார் ஆய்வு:
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்துள்ளன.
இதனையடுத்து ஷர்மிளா கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கணேஷ் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை வல்லுனர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினர் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
திருடு போன பொருட்களின் மதிப்பு:
இந்நிலையில், கொள்ளை நடந்த ஷர்மிளா வீட்டிற்கு வந்த நகர காவல் துணை கண்காணிப்பாளர் ராகவி சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். திருடு போன பொருட்களின் மதிப்பு சுமார் ஐந்து லட்சம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் இப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.