பிரபல நடிகரின் பண்ணை வீட்டில் 10வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : வடமாநில இளைஞரை கைது செயத போலீஸ்...

பிரபல கன்னட நடிகருக்கு சொந்தமான பண்ணை தோட்டத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகரின் பண்ணை வீட்டில் 10வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : வடமாநில இளைஞரை கைது செயத போலீஸ்...
Published on
Updated on
1 min read

மைசூரு அருகே  பிரபல கன்னட ஹீரோ தர்ஷன். இவருக்கு சொந்தமான பண்ணைத்தோட்டத்தில் குதிரைகளை வளர்த்து வருகிறார் தர்ஷன் . ஓய்வு நேரத்தில் அங்கு குதிரை சவாரி செய்வது வழக்கமாக வைத்துள்ளார். அவற்றைக் கவனித்துக் கொள்ள சிலர் அங்கு பணியாற்றி வருகிறார்கள்.

 சிவமூக்கா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அந்தப் பண்ணை தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களின் பத்து வயது மகளை, கடந்த 13-ஆம் தேதி பீகார் மாநிலத்தை சேர்ந்த நசீர் என்ற குதிரை பராமரிப்பாளர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தச்சம்பவம் குறித்து சிறுமி , பெற்றோரிடம் கூறியதை அடுத்து, அவர்கள் போலீசில் புகார் செய்தனர்.

வழக்குப்பதிவு செய்து விசாரித்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் நசீமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.நடிகரின் பண்ணை வீட்டில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது அந்தப் பகுதியில் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com