சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த  இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை...

செங்கல்பட்டு சிறார் சிறப்பு நீதிமன்றத்தில் சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வழக்கில் ஒருவருக்கு 10ஆண்டுகள் சிறைதண்டனையுடன், அபரதம்  விதித்து சிறார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த  இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை...

செங்கல்பட்டு | காஞ்சிபுரம் மாவட்டம் அய்யன்சேரி கிராமத்தை சேர்ந்த அகிலன் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்த நிலையில் தென்னேரி கிராமத்தை சேர்ந்த 16வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி காதலித்துள்ளார்.

மேலும், சிறுமியிடம் ஏற்கனவே திருமணமானதை மறைத்து சிறுமியுடன் உடலுறவு கொண்டதால் ஒரு குழந்தைக்கு தாயாகியும் உள்ளார். பின் அகிலனுக்கு ஏற்கனவே திருமணமானது சிறுமிக்கு தெரியவந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி காஞ்சிபுரம் மகளீர் காவல் நிலையத்தில் அகிலன் மீது புகாரளித்தார்.

இந்த வழக்கு கடந்த 2016ம்ஆண்டு முதல் செங்கல்பட்டு சிறார் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று அகிலனுக்கு ஏக காலத்திற்க்குள் 10ஆண்டுகள் சிறை தண்டனையும், 15ஆயிரம் அபராதமும் கட்ட வேண்டுமென நீதிமன்ற நீதிபதி தமிழரசி தீர்ப்பாளித்தார்.

மேலும் படிக்க | ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருட்டுப்போன நகைகள்....!!