கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட 11ம் வகுப்பு மாணவன்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் 11ம் வகுப்புப் பள்ளி மாணவனை கழுத்தை நெறித்து கிணற்றில் தள்ளி கொலை செய்த சக மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட 11ம் வகுப்பு மாணவன்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

கல்லறைத் தோட்டத்தைச் சேர்ந்த மாதவன் என்பவர் ராயப்பன்பட்டியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.

திடீரென அவர் மாயமான நிலையில் உத்தமபாளையம் நூலகப்பகுதி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாதவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

தொடர்ந்து சந்தேகத்தின்பேரில் அவரது  நண்பர்களிடம் விசாரித்த போது அதிர்ச்சித் தகவல் வெளியானது.

கிணற்றுப்பகுதியில் நால்வரும் இணைந்து உணவருந்திக் கொண்டிருந்தபோது, மதுவாங்க மாதவனுக்கு மற்ற மூவரும் ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும் இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், மாதவனை கழுத்தை நெறித்து கொலை செய்து கிணற்றில் தள்ளியதும் தெரிய வந்து. இதையடுத்து  3 மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். பணம் மற்றும் மது பிரச்சினை காரணமாக பள்ளி மாணவன் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.