அடுக்கடுக்காக 13 மனித சடலங்கள்!

அடுக்கடுக்காக 13 மனித சடலங்கள்!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் அடுக்கடுக்காக சடலங்கள் கண்டெடுக்கப் பட்டதால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இலங்கை முல்லைத்தீவில் உள்ள கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி இறந்த உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.  அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் அகழாய்வு செய்து பார்த்த போது தாெடர்ந்து பல உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அகழாய்வு பணி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில், இதுத் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவர், மூன்று உடற்பாகங்கள் மீட்கப்பட்டதாகவும், ஏற்கனவே மீட்கப்பட்ட இரண்டு உடற்பாகங்களுடன் ஐந்து உடற்பாகங்கள் மொத்தமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மொத்தமாக 13 மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில், மேலும் அந்த குழியில் நெருக்கமாக உடல்கள் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

மேலும், மிக மிக நெருக்கமாக பல மனித எலும்பு கூட்டு தொகுதிகள் காணப்படுகின்றன எனவும் அகழ்வு பணி தொடங்கியதில் இருந்து இதுவரை ஐந்து மனித உடல் பாகங்க முழுமையாக மீட்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார். நேற்று எடுக்கப்பட்ட மனித எச்சத்தில் துப்பாக்கிச் குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசால் நடத்தப்பட்ட போரில் கொல்லப் பட்ட மக்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.