பள்ளி குழந்தைகள் உட்பட 16 பேர் பலி; குல்லுவில் நடந்த பயங்கர விபத்தால் பதற்றம்:

இமாச்சல பிரதேசத்தின் குலுவின் சைஞ்ச் பள்ளத்தக்கில் ஒரு தனியார் பேருந்து ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

பள்ளி குழந்தைகள் உட்பட 16 பேர் பலி; குல்லுவில் நடந்த பயங்கர விபத்தால் பதற்றம்:

குலு பகுதியின் சைஞ்ச் பள்ளத்தாக்கில் ஒரு தனியார் பெருத்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து ஏற்பட்டதில், பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணியளவில் நடத்த இந்த விபத்தில், 45 பயணிகள் பயணித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதில் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த இடம் மாவட்ட தலைமையகத்தில் இருந்து கிட்டத்தட்ட 60 கிமீ தொலைவில் உள்ளது.மேலும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதோடு, காயமடைந்த மூவர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்து " இதயத்தைப் பிளந்தது” என்றும், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.  "இமாச்சலப் பிரதேசத்தின் குலுவில் நடந்த பேருந்து விபத்து இதயத்தை உருக்குகிறது. இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது" என பிரதமர் கூறியுள்ளதாக அவரின் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.