திருச்சி விமான நிலையத்தில் ரூ.9 லட்சம் மதிப்பிலான 167 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்..!

திருச்சி விமான நிலையத்தில் ரூ.9 லட்சம் மதிப்பிலான 167 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்..!

திருச்சி விமான நிலையத்தில் ரூ.9 லட்சம் மதிப்பிலான 167 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

துபாயிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் இந்தியா விமான பயணிகளை வாண் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த ஒரு பயணியை சோதனை செய்த போது அவர், அவரின் உள்ளாடைகளில் பேஸ்ட் வடிவத்தில் 167 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. அதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணைக் கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு 9 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.