திருவண்ணாமலை | சென்னை கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் வசீம் மற்றும் இவரது மனைவி அப்ரின் ஆகியோர் குடும்பத்துடன் வந்தவாசிக்கு 148 என்னும் அரசு பேருந்தில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் கிராமம் அருகே அரசு பேருந்து வரும்போது கைக்குழந்தையுடன் வந்த மூன்று பெண்கள் பேருந்தில் அமர்ந்து கொண்டு வசீம் எடுத்து வந்த பேக்கை நைசாக சத்தம் இல்லாமல் திறந்து நகையை திருட முயற்சி செய்தனர்.
இதை கவனித்த வசிமின் மனைவி உடனடியாக சுதாரித்துக் கொண்டு ஏன் என்னுடைய பேக்கை எடுக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டவுடன் உடனடியாக அந்த பெண்கள் பேருந்தை நிறுத்த கூறி உடனடியாக அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர்.
மேலும் படிக்க | பள்ளி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி...
இதனால் வசீம் கொண்டு வந்த பைகளில் 15 சவரன் தங்க நகை தப்பியது. பின்னர் உடனடியாக பேருந்தில் இருந்து இறங்கி மூன்று பெண்களை ஓடி சென்று மடக்கி பிடித்த போது அதிலிருந்து ஒரு பெண் அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இரண்டு பெண்களை பிடித்து வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது போலீசார் விசாரணை செய்த போது பெண்கள் கையில் போலியான ஆதார் கார்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் படிக்க | வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை..!
மேலும் விசாரணையில் திருச்சி பீமா நகர் பகுதியை சேர்ந்த அகிலா என்றும் அவரது சகோதரி ஆரிக்கா என்றும் தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய பெண் சரண்யா என்றும் தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது பல காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் கோவில் கும்பாபிஷேகம் திருவிழாக்கள் மற்றும் எங்கே அதிகமாக கூட்டம் இருக்கிறதோ அங்கு இவர்கள் சென்று கூட்டத்துடன் கூட்டமாக நகையை திருடுவது கைவந்த கலையாகும்.
இதையடுத்து போலீசார் இரண்டு பெண்கள் மற்றும் கைக்குழந்தையுடன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.