
பொள்ளாச்சியில் ரமதீன் என்பவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 20 பவும் நகை, 15 ஆயிரம் ரொக்க பணம் திருடு போகியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஆண்டாள் அபிராமி நகர் பகுதியில் வசித்து வரும் ரபிதீன். இவர் மார்க்கெட் ரோடு பகுதிகளில் பேக்கரி நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு குமரன் நகர் பகுதிக்கு தனது அண்ணன் இறுதிச்சடங்கிற்கு சென்றுள்ளார்.
காவல் நிலையத்திற்கு தகவல்
இறுதிச்சடங்கை முடித்து விட்டு மறுநாள் காலை வீடு திரும்பிய ரபிதீனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. உடனே இந்த சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
திருட்டு சம்பவம்
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில், நள்ளிரவில் வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து சுமார் 20 பவுன் நகை 15 ஆயிரம் திருடி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அதே பகுதியில் 2 வீடுகளின் கதவுகளை உடைக்க முற்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
சிசிடிவி காட்சிகள்
இதனை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து அப்பகுதிக்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் தீபாசுதா உத்தரவின் பேரில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.