ரூ.15 லட்சம் மதிப்பிலான செல்போன் உதிரிபாகங்களை கொள்ளை-3 பேர் கைது  

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன் உதிரிபாகங்களை கொள்ளையடித்த 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.  

ரூ.15 லட்சம் மதிப்பிலான செல்போன் உதிரிபாகங்களை கொள்ளை-3 பேர் கைது   

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்தி ரோட்டில் கடந்த 8 ஆம் இரவு  இரவு ஆரணி  டவுன் காந்தி சாலையிலுள்ள PGN காம்ப்ளக்ஸில் தனியாருக்கு சொந்தமான செல் போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில்  பல இலட்சம் மதிப்பிலான செல் போன் உதிரி பாகங்கள்  கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக  9 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி உத்திரவின் பேரில், ஆரணி DSP கோட்டிஸ்வரன் தலைமையில் போலிஸார் தனிப்படை அமைத்து இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் தருமன் ஆகியோர் கொண்ட போலீஸ் குழு தீவிர தேடுதலின் போது மேலும் செல்போன் கடையில் கொள்ளையடிக்கப்பட்டவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தனியார் கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே பதுங்கி  இருப்பதாக தகவல் வந்தது.

இதை அடுத்து, போலிஸார் ஆற்காடு சென்று பதுங்கி இருந்த  கொள்ளையர்களை மடக்கி பிடித்து அவர்களை விசாரித்ததில், ஆரணியில் செல்போன் கடையில் உதிரிபாகங்களை கொள்ளையடித்த நபர்கள் என அறிந்து போலிஸார் பிடித்து விசாரணை செய்ததில்  கொள்ளையில் ஈடுப்பட்டவர்கள், இராஜஸ்தான் மாநிலம் சாலூர் மாவட்டம், லுபர் பகுதியைச் சேர்ந்தசேர்ந்த ஜலாங்சிங் ரத்தோர், நக்குல்சிங், விக்ரம்சிங்ஆகிய முன்று நபர்கள் என தெரியவந்தது.  

தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூபாய் 15 லட்சம் மதிப்புடைய செல்போன் உதிரி பாகங்களான மொபைல் காம்போ, மொபைல் செல்போன் டச் ஸ்கிரின்,  டிஸ்பிளே உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து, அவர்களை கைது செய்து  ஆரணி சார்பு நீதீமன்ற நீதிபதியிடம் ஆஜர்ப்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.