கோவிலின் முன்பு கண்டெடுக்கப்பட்ட 3 ஐம்பொன் சிலைகள்- போலீசார் விசாரணை

சென்னையில் கோவிலின் முன்பு கண்டெடுக்கப்பட்ட 3 ஐம்பொன் சிலைகள் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவிலின் முன்பு கண்டெடுக்கப்பட்ட 3 ஐம்பொன் சிலைகள்- போலீசார் விசாரணை

சென்னையில் கோவிலின் முன்பு கண்டெடுக்கப்பட்ட 3 ஐம்பொன் சிலைகள் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை ஜாம்பஜார் பகுதிக்கு உட்பட்ட ஆறுமுகப்பா தெருவில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை இந்த கோவிலின் முன்பு கிடந்த ஒரு பையில் 3 ஐம்பொன்னாலான சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாக தி.மு.க-வின் 115வது வட்டச் செயலாளர் உட்பட அப்பகுதி மக்கள் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் ஜாம்பஜார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த பையை பரிசோதித்தபோது அதில் 3/4 அடி உயரமுள்ள அம்மன் சிலை, 1 அடி உயரமுள்ள கிருஷ்ணர் சிலை, 5 இஞ்ச் உயரமுள்ள அன்னபூரணி சிலை மற்றும் 2 அடியுள்ள பிரபை சங்கு உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது. 

இதனையடுத்து அவற்றை கைப்பற்றிய போலீசார் சிலைகளை காவல் நிலையம் எடுத்துச் சென்று இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்திலுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு சிலைகளை அங்கு வைத்தவர்கள் யார்? என்பது குறித்தும், இந்தச் சிலைகள் ஏதேனும் கோவில்களில் திருடப்பட்ட புராதன சிலைகளா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கைப்பற்றப்பட்ட சிலைகள் தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.