கள்ளக்காதலனுக்காக கணவனை கொலை செய்த மனைவி உள்பட 3 பேர் கைது...

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கள்ளக்காதலனுக்காக கணவனை கொலை செய்த மனைவி உள்பட மூன்று பேர்களை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதலனுக்காக கணவனை கொலை செய்த மனைவி உள்பட 3 பேர் கைது...

திருவண்ணாமலை | வந்தவாசி அடுத்த பெரணமல்லூர் அருகே கடுகனூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி காந்தன் இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லட்சுமி காந்தனுக்கும் ராஜேஸ்வரிக்கும் குடும்ப தகராறு காரணமாக வெளியே சென்ற லட்சுமி காந்தன் வீட்டிற்கு வரவில்லை.

இந்த நிலையில் பல இடங்களிலும் தேடிப் பார்த்தும் கிடைக்காத நிலையில் வீட்டின் அருகே வயல்வெளியில் லட்சுமி காந்தன் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து தகவல் அறிந்த பெரணமல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க | நல்லது செய்ய முயன்றவர் அரிவாள் வெட்டுடன் மருத்துவமனையில் அனுமதி...

அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் ராஜேஸ்வரி செய்யாறு சிப்காட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், அதே சிப்காட்டில் பணிபுரிந்து வரும் உதயசூரியன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு உதயசூரியனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் உதயசூரியன் ராஜேஸ்வரியிடம் உன்னுடைய கணவன் லட்சுமிகாந்தனை கொன்றால் தான் நான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணை வெட்டிக் கொலை செய்த கொடூரம்...

இதையடுத்து கடந்த வாரம் உதயசூரியன் அவருடைய மைத்துனன் பாண்டியன் மற்றும் ராஜேஸ்வரி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து லட்சுமிகாந்தனுடன் மது அருந்த அழைத்து சென்று கழுத்தை நெரித்து கழுத்தை கத்தியால் அறுத்து கொன்றுவிட்டு அருகில் உள்ள முள்புதாரில் வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மனைவி ராஜேஸ்வரி உதயசூரியன் மற்றும் பாண்டியன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | கூடுதலாக சால்னா கேட்டதால் ஹோட்டல் ஊழியரை தாக்கிய இளைஞர்கள்...! வெளியான சிசிடிவி காட்சிகள்..!