துணிக்கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது..!

துணிக்கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது..!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் துணிக்கடையில் புகுந்து மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

என்.என்.கார்டன் பகுதியில் செயல்பட்டு வந்த கடையில் தகராறு அரங்கேறிய நிலையில், அக்கம்பக்கத்தினர் கூடியதால் அனைவரும் தப்பியோடினர். தொடர்ந்து மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதையடுத்து, சம்பவ இடம் சென்ற போலீசார் உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர். வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் தொழிற்போட்டியால் இரு கடைகளுக்கு இடையே ஏற்பட்ட போட்டியில் ரவுடியை ஏவி மிரட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.