கஞ்சா விற்ற இளைஞரை துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்த கும்பல்..!

கஞ்சா விற்ற இளைஞரை துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்த கும்பல்..!

ராணிப்பேட்டையில், கஞ்சா வியாபாரியை துண்டு துண்டாக வெட்டிப் படுகொலை செய்த 3 பேரை, போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

கஞ்சா வியாபாரி துண்டு துண்டாக வெட்டி படுகொலை:

ராணிப்பேட்டை மாவட்டம் பானவரம் அடுத்த கூத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார். இவரை  கடந்த சனிக்கிழமையன்று இரவு, திருவள்ளூர் போலீசார் என கூறி ஆறு பேர் கொண்ட கும்பல் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் மறுநாள் காலையில் பானவரம் அடுத்த புதூர் மலைமேடு சுடுகாட்டு பகுதியில், சரத்குமார் கை மற்றும் இரண்டு கால்கள்  துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பானாவரம் போலீஸாரல் சடலமாக மீட்கப்பட்டார். இந்த படுகொலையில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக, ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் தீபா சத்தியன் உத்தரவின் பேரில் இரண்டு டிஎஸ்பி தலைமையில் முன்று தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியினை தொடங்கினர். 

முதல்கட்ட விசாரணையில் வெளிவந்த தகவல்:

முதல் கட்ட விசாரணையில் பானாவரம் அடுத்த கீழ் வீராணம் பகுதியை சேர்ந்த அண்ணன் தம்பிகளான சரவணன், செந்தில, ராமச்சந்திரன் ஆகிய மூவரும் பாணாவரம் பகுதியில் ஆட்டோ ஓட்டிக்கொண்டு கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சரத்குமார் அப்பகுதியில் புதிதாக கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளான். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவும், கடந்த ஓராண்டுக்கு முன்பு ரவுடி நித்யா என்பவன் பாணாவரம் பகுதியில்  கொலை செய்யப்பட்ட வழக்கில் நித்யாவின் கூட்டாளிகள் ஆன கிளின்டன் சரத்குமார் ஆகியோர் கொலை செய்த வினோத்குமார் என்பவனுக்கு எதிராக சாட்சியாக இருந்த காரணத்தினால் ஏற்பட்ட விரோதம் காரணமாகவும்,  இந்த இரு சம்பவங்களில் தொடர்புடைய இரு குழுக்கள் ஒன்றிணைந்து சரத்குமாரை வீட்டிற்கு சென்று அழைத்து வந்து பாணாவரம் அருகே உள்ள  வீராணம் ஏரியில் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்ததாகவும் அதன் பின்பு மீண்டும் அப்பகுதியில் தங்களுக்கு எதிராக யாரும் கஞ்சா விற்பனையில் ஈடுபடக்கூடாது என்ற பயத்தை ஏற்படுத்த பாணாவரம் அடுத்த புதூர் மலைமேடு சுடுகாடு பகுதியில் போட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள் சிறையில் அடைப்பு:

மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கீழ்வீராணம் பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி ராமச்சந்திரன், நேற்று ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில்  சரணடைந்த நிலையில், சரவணன், லூவி அரசன் மற்றும் ராஜா ஆகியோர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் வாலாஜாபேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் லூவி அரசன் மற்றும் ராஜா ஆகியோர் போலீசாரை கண்டு தப்பியோடிய போது, மேம்பாலத்திலிருந்து குதித்ததால் இருவருக்கும் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும், தலைமறைவாக உள்ள ராஜேஷ், சூர்யா மற்றும் செந்தில் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.