சிறையிலுருந்து 3 கைதிகள் தப்பி ஓட்டம்.. பாளையங்கோட்டை மத்திய சிறையில் பரபரப்பு!!

சிறையிலுருந்து 3 கைதிகள் தப்பி ஓட்டம்.. பாளையங்கோட்டை மத்திய சிறையில் பரபரப்பு!!

பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து அடுத்தடுத்து 3 கைதிகள் தப்பி ஓடிய விவகாரத்தில் சிறைச் சாலையின் தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாளையங்கோட்டை சிறைச்சாலை:

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறைச்சாலை நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் மற்றும் விசாரணை கைதிகள் என சுமார் ஆயிரத்து 300 பேர் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு சிறைக் காவலர்கள் 150 பேர், சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

3 கைதிகள் அடுத்தடுத்து சிறையில் இருந்து   தப்பி ஓட்டம்:

இந்நிலையில், கடந்த வாரத்தில் மட்டும் 3 கைதிகள் அடுத்தடுத்து தப்பி ஓடியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சிறை அங்காடியில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்த டேவிட் என்ற ஆயுள் கைதி, தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த ஜீவா உள்ளிட்ட 3 கைதிகள் அடுத்தடுத்து சிறையில் இருந்து தப்பியதற்கு சிறை அலுவலர்கள் மற்றும் உளவுத்துறையின் அலட்சியமே காரணம் என புகார் தெரிவிக்கப்பட்டது.

தலைமை காவலர் கந்தசாமி பணியிடை நீக்கம்:

இந்த விவகாரத்தில், சிறைச்சாலையின் தலைமை காவலர் கந்தசாமியை பணியிடை நீக்கம் செய்து சிறை கண்காணிப்பாளர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.  இதனிடையே, பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து தப்பிய மூன்று பேரில் புளியங்குடியை சேர்ந்த ஜீவா என்ற கைதியை மட்டும் போலீசார் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.