தங்க சங்கிலியை பறிக்க முயன்ற 3 பெண்கள் கைது...

திருவிடைமருதூர் தீர்த்தவாரியில் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்க சங்கிலியை பறிக்க முயன்ற 3 பெண்கள் கைது...
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர் | திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் கடந்த 10 தினங்களாக தைப்பூச பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்று வந்தது ஒரே நாளில் ஐந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.

அப்போது இரண்டு பெண்கள் செயின்களை பறி கொடுத்தனர். இதனால் திருவிடைமருதூர் போலீசார் மறுநாள் நடைபெற்ற தீர்த்த வாரியின்போது சாதாரண உடையில் மகளிர் போலீசாரை பெண்கள் கூட்டத்தில் கண்காணிக்க அமர்த்தி இருந்தனர்.

தீர்த்தவாரி நடைபெற்ற காவிரியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட நிலையில் செயின் பறிப்பில் ஈடுபட முயன்ற மூன்று பெண்களை திருவிடைமருதூர் துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் தலைமையில் போலீசார் சுற்றி வளைத்து அழைத்து வந்தனர்.

மூவரிடமும் திருவிடைமருதூர் போலீசார் நடத்திய விசாரணையில் இருவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர் என்றும் ஒருவர் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வருகிறது மூன்று பேரிடமும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவர்கள் கைவரிசை காட்டிய இடங்களில் நகைகளை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com