ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்த பரிதாபம்..

பெங்களூருவில் குடும்ப பிரச்சினை காரணமாக 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும் அதிர்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்த பரிதாபம்..

பெங்களூருவில் குடும்ப பிரச்சினை காரணமாக 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும் அதிர்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு பேட்டரஹள்ளி திகலரபாளையா பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர், பத்திரிக்கை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி பாரதி, மகள்கள் சிந்தனா, சிந்து ராணி, மகன் மது சாகர் மற்றும் 9 மாத பேரக்குழந்தை ஆகியோர் இருந்தனர். சில நாட்களுக்கு முன்பு  சங்கர் வெளியே சென்றிருந்த நிலையில் வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் வீட்டை சோதனையிட்டதில் சங்கரின் மனைவி, 2 மகள்கள்,  9 மாத பேரக்குழந்தை ஆகியோரின் சடலம் கிடந்துள்ளன.

இவர்களுடன் இருந்த 3 வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என தெரியவந்தது.  இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.