பிறந்து 40 நாட்களே ஆன ஆண்குழந்தை... கழிவறையின் வாளித்தண்ணீரில் மூழ்கியபடி சடலமாக மீட்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே பிறந்து 40 நாட்களே ஆன குழந்தை கழிவறையின் வாளித்தண்ணீரில் மூழ்கியபடி சடலமாக மீட்கப்பட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.
பிறந்து 40 நாட்களே ஆன ஆண்குழந்தை... கழிவறையின் வாளித்தண்ணீரில் மூழ்கியபடி சடலமாக மீட்பு!!
Published on
Updated on
1 min read

தோல் ஷாப் பகுதியில் வசித்து வரும் 22 வயதான மனோ என்பவரும் 18 வயதான நந்தினி என்பவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது.

வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவருக்கும் 40 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் குழந்தை தனது தாய், தந்தை மற்றும் பாட்டியுடன் உறங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு 2 மணியளவில் குழந்தை காணாததை அறிந்து தாய் பதறியடித்து எழுந்ததாக தெரிகிறது.

தொடர்ந்து 3 பேரும் வீடு முழுவதும் தேடியதை அடுத்து, வீட்டின் வெளியே இருந்த கழிவறையில் வாளித் தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் குழந்தை மீட்கப்பட்டது. இறந்த பிஞ்சைக் கண்டு குடும்பத்தினர் அனைவரும் கதறி அழுத நிலையில், தந்தை அளித்த புகாரின் பேரில் 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com