கள்ளச்சாராயம்:  5 போலீசார் சஸ்பெண்ட்!

கள்ளச்சாராயம்:  5 போலீசார் சஸ்பெண்ட்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய 5 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில்  கள்ளச்சாராயம் குடித்து 20-க் கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதன் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் கள்ளச்சாராயத்தை தடுக்க தவறும் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் அருள், தானிப்பாடி போலீஸ் ஏட்டுகள் நிர்மல், சிவா, செங்கம் தலைமை காவலர் சோலை, கீழ்கடுங்காளூர் தலைமை காவலர் ஹரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் புகார் வரப்பெற்ற போலீசார் குறித்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com