திருச்சி விமான நிலையத்தில் பயனிடம் 66 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம் பறிமுதல்.. சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி

திருச்சி விமான நிலையத்துக்கு வந்த பயணியிடம் இருந்த ரூபாய் 66 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தில் பயனிடம் 66 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம் பறிமுதல்.. சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி
Published on
Updated on
1 min read

திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில்  பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது திருச்சியை சேர்ந்த முகமது யூசுப் என்ற பயணி தனது கைப்பையில் ரூபாய் 66 -லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர், சிங்கப்பூர் டாலர் மலேசியன் வெள்ளி  உட்பட வெளிநாட்டு பணகளை எடுத்துச் செல்ல இருந்தது தெரியவந்தது. இதனையெடுத்து உரிய ஆவணமின்றி கடத்த முயன்ற வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பணத்தை கடத்த முயன்ற முகமது யூசுப்பை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com