மூட நம்பிக்கையின் உச்சம்.! பேய் பிடித்ததாக 7 வயது மகனை தாயே அடித்து துன்புறுத்தி கொன்ற கொடூரம்.!

மூட நம்பிக்கையின் உச்சம்.! பேய் பிடித்ததாக 7 வயது மகனை தாயே அடித்து துன்புறுத்தி கொன்ற கொடூரம்.!

திருவண்ணாமலை மாவட்டத்தில், சிறுவனுக்கு பேய் பிடித்ததாக கூறி, தாயின்  சகோதரிகளே சிறுவனை அடித்து துன்புறுத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் திலகவதி. கணவனை இழந்த இவர், தனது சகோதரிகளான கவிதா, பாக்கியலட்சுமி மற்றும் 7 வயது மகன் சபரி ஆகியோருடன் அரியூரில் வசித்து வந்துள்ளார். சிறுவனுக்கு அடிக்கடி இழுப்பு வந்து உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளது. 

இதனால் சிறுவனுக்கு பேய் பிடித்திருக்கலாம் என சந்தேகமடைந்த அவர்கள், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வசிக்கும் பேய் ஓட்டும் பாய் ஒருவரிடம் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்கென அவர்கள் சபரியுடன் நேற்று ஆட்டோவில் புறப்பட்டனர். ஆனால் நள்ளிரவு ஆகியதை அடுத்து, அவர்கள் கண்ணமங்கல பேரூராட்சி வளாகத்தில் இரவு தங்கியுள்ளனர். அப்போது சிறுவனுக்கு திடீரென மேல்மூச்சு வாங்கியதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து சிறுவனுக்கு பேய் தான் பிடித்து விட்டது என நினைத்த அவர்கள் சிறுவனின் கை, கால்களை பிடித்து இழுத்து  தாக்கியுள்ளனர். இதில் சிறுவன் உயிரிழந்தான். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து,  திலகவதி உள்ளிட்ட மூவரிடம் விசாரணை நடத்துகின்றனர். 

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com