போலி லைசன்சுடன் பல தசாப்தங்களுக்கு வழக்கறிஞராக பணிபுரிந்த 72 வயது பெண் கைது!

போலி  லைசன்சுடன் பல தசாப்தங்களுக்கு வழக்கறிஞராக பணிபுரிந்த 72 வயது பெண் கைது!

குற்றம் சாட்டப்பட்ட சோஹினி என்பவர், ஒரு வாடிக்கையாளரை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு முன், ஒவ்வொரு நீதிமன்றத்திலும் போலியான வக்காளத்தை சமர்ப்பித்து வக்கீல் தொழில் செய்து வந்ததாக பொலிசார் தெரிவித்தனர். அக்பரலி முகமது கான் என அடையாளம் காணப்பட்ட போரிவலி நீதிமன்றத்தைச் சேர்ந்த வழக்கறிஞர், சோஹினியின் நற்சான்றிதழ்களைக் குறித்து கேள்வி எழுப்பியதை அடுத்து, ஜூலை மாதம் அவருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், பாந்த்ராவில் உள்ள பாலி ஹில்லில் வசிக்கும் சோஹினி வரவில்லை.

கடந்த சனிக்கிழமையன்று, சோஹினி காவல் நிலையத்திற்குச் சென்று தனது ஆதார் அட்டை மற்றும் வக்காளத்துடன், தனது வக்கீல் பட்டத்தை சமர்ப்பித்தார். அவரது வழக்கறிஞர் உரிமம் போலியானது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது உரிமத்தை சரிபார்க்க போலீசார் இப்போது மகாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சிலை தொடர்பு கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.