திருப்பூர்: 18 கிலோ குட்கா வைத்திருந்த வட மாநில தொழிலாளி கைது!!

பல்லடம் அருகே சட்ட விரோதமாக விற்பனைக்காக 18 கிலோ குட்கா வைத்திருந்த வட மாநில தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர்: 18 கிலோ குட்கா வைத்திருந்த வட மாநில தொழிலாளி கைது!!

குட்கா விற்பனை: போலீசார் சோதனை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

சிக்கிய வடமாநில தொழிலாளி:

சின்னக்கரை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக நடந்து வந்த வடமாநில தொழிலாளியிடம் சோதனை மேற்கொண்ட பொழுது அவர் வைத்திருந்த பையில் தடைசெய்யப்பட்ட 18 கிலோ குட்கா இருந்தது தெரிய வந்தது.

வடமாநில தொழிலாளி விவரம்:

அதன் அடிப்படையில் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த டிக் பிஜய் ஸ்வைன் என்பதும் தனியார் பனியன் நிறுவனத்தில் பணி புரிந்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் குட்காவை விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த நபரை கைது செய்த காவல் துறையினர் 18 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர்.