பைக் மீது டாடா ஏஸ் வாகனம் மோதியதால் தகராறு.. 4 பேருக்கு சரமாரி கத்தி குத்து!!

தஞ்சையில் இருசக்கர வாகனம் மீது டாடா ஏஸ் வாகனம் மோதியதால் ஏற்பட்ட தகராறில் 4 பேரை கத்தியால் சரமாரியாக குத்தியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பைக் மீது டாடா ஏஸ் வாகனம் மோதியதால் தகராறு.. 4 பேருக்கு சரமாரி கத்தி குத்து!!
Published on
Updated on
1 min read

ஆலத்தூர் என்ற கிராமத்தின் வீரனூர் கோயிலில் கிடா வெட்டு பூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மங்களூரைச் சேர்ந்த கார்த்திக், கோபி, கரண், சரவணகுமார் ஆகியோர், டாடா ஏசி வானம் மூலம் ஊருக்குச் செல்ல புறப்பட்டதாக தெரிகிறது.

அப்போது இவர்களது வாகனம் அங்கிருந்த ஒரு பைக்கின் மீது மோதியதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு முற்றியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வாக்குவாதம் முற்றியதில் ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்த சிலர் இந்த நால்வரையும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் பயங்கரமாக தாக்கினர்.

இதையடுத்து அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கார்த்தி என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து இந்த சம்பவத்துக்கு காரணமானதாக கூறப்படும் ராஜதுரை என்பவரை போலீசார் கைது செய்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com