வாரி சுருட்டிய மருமகன்... புகார் கொடுத்த மாமியார்...
மாமியாரின் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை சுருட்டி கொண்டு தலைமறைவான மருமகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்.

அரசுப் பணிக்கு தேர்வு நடத்தியது தொடர்பாக நீதிமன்றத்துக்கு தவறான தகவல்களை அளித்ததாக, அரசுப் பணியாளர் தேர்வாணைய இணைச் செயலாளர், துணைச் செயலாளர் மற்றும் இரு சார்பு செயலாளர்கள் என நான்கு பேர் மீது நடவடிக்கைகளை துவங்கியுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரி விக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர் வில், உரிய மதிப்பெண்கள் பெற்றும் தேர்வு செய்யப்படாததை எதிர்த்து, திருப்பூரைச் சேர்ந்த சாய்புல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பளித்ததால், அதை எதிர்த்து, அரசு பணியாளர் தேர்வாணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில் தேர்வு தொடர்பான உண்மைத் தகவல்களை மறைத்து, தவறான தகவல்களை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் கே.குமரேஷ் பாபு அமர் வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், நீதிமன்றத்துக்கு தவறான தகவல்களை வழங்கியதற்காக, தேர்வாணைய இணைச் செயலாளர் பிரான்சிஸ் மரிய பு வி, துணைச் செயலாளர் ஏ. வி.ஞானமூர்த்தி, சார்புச் செயலாளர்கள் ஜி.சிவகுமார், கே.பாஸ்கர பாண்டியன் ஆகியோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்து, நடவடிக்கைகள் துவங்கியுள்ளதாக தெரி வித்தார்.
மேலும், தேர் வில் இடஒதுக்கீட்டை பின்பற்றுவதில் நடந்த குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட மனுதாரரை தேர்வு செய்வது தொடர்பாக நீதிமன்ற உத்தர வின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும் எனவும், தவறு எப்படி நடந்தது, எப்படி சரி செய்வது என்பது குறித்து குழு அமைத்து விசாரிக்கப்படும் எனவும் மொத்த தேர்வு முறை குறித்து விசாரித்தால் அது தேர்வாணையத்துக்கு சிக்கலை ஏற்படுத்தும் எனவும் விளக்கமளித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
இதையும் படிக்க:முதலமைச்சர் தலைமையில் நாளை திமுக மாசெ கூட்டம்!
மனசாட்சி இல்லாத தனி நபர்களாலும், தனியார் நிறுவனங்களாலும் கல்வி வணிக மயமாக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது
புதுச்சேரியை சேர்ந்த சித்தார்த்தன் என்பவர் மருத்துவ மேற்படிப்பில் சேர்வதற்காக கடந்த 2017ம் ஆண்டு நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சியும் பெற்றார். புதுச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தும், உரிய நேரத்தில் கட்டணம் செலுத்தவில்லை என்றும் கட்டாய பணி உத்தரவாதம் புரிவதாக உறுதியளிக்கவில்லை போன்ற காரணங்களை கூறி, சித்தார்த்தனுக்கு மாணவர் சேர்க்கை மறுக்கப்பட்டது.
இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் ஆர்.கலைமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்த நிலையில், அதிக கட்டணம் செலுத்த வேண்டுமென கல்லூரி நிர்வாகம் கூறியதாக தெரிவித்தார்.
அடுத்த கல்வியாண்டிலேயே அந்த மாணவருக்கு வேறு கல்லூரியில் இடம் கிடைத்து அவர் மருத்துவ மேற்படிப்பை முடித்து விட்டதாக புதுச்சேரி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர், மருத்துவ மேற்படிப்பை முடித்திருந்தாலும், 2017-18ம் கல்வி ஆண்டில் அவருக்கு அனுமதி மறுத்தது தவறு எனக் கூறி, இதற்காக 15 லட்சம் ரூபாயை மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதில் புதுச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவனம் 10 லட்சம் ரூபாயும், செண்டாக் தேர்வுக் குழு ஐந்து லட்ச ரூபாயையும் நான்கு வாரங்களில் வழங்க உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், சமூகத்திற்கு சேவை செய்வதாக கூறிக்கொண்டு, மனசாட்சியே இல்லாமல், தனி நபர்களும், தனியார் நிறுவனங்களும் கல்வியை வணிக மயமாக்கியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு" என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி, இந்த இரு கண்களும் தற்போது வணிக பொருட்களாக்கப்பட்டுள்ளதாகவும், அதனை வாங்குவதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தனியார் கல்லூரிகளில் இது போன்று நடக்காமல் இருக்க தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுக்குமெனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: முதலமைச்சர் தலைமையில் நாளை திமுக மாசெ கூட்டம்!
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப் பிரிவு போலீசார் தரப் பில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டார் என புகார் அளிக்கப்பட்டு அப்போது மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக போக்குவரத்துத் துறையில் வேலை வழங்க பணம் பெற்ற புகார் தொடர்பாக முழுமையாக தொடக்கத்தில் இருந்து விசாரணை நடத்த வேண்டும். தேவையெனில், சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய குற்றப் பிரிவு போலீசாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜி மீது செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டம் உட்பட மூன்று வழக்குகள் மத்திய குற்றப் பிரிவு போலீசார் சார் பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மூன்று வழக்குகளுக்கு உண்டான குற்றப்பத்திரிகையை உச்சநீதிமன்ற உத்தரவுபடி மத்திய குற்றப் பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் சிறப்பு நீதிமன்றத்தில் மூன்று வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம். பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 5000க்கும் மேற்பட்ட பங்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மூன்று வழக்குகளின் குற்றப்பத்திரிகையிலும் செந்தில்பாலாஜியின் பெயர் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கில் அமலாக்க துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப் பிடத்தக்கது.
இதையும் படிக்க: முதலமைச்சர் தலைமையில் நாளை திமுக மாசெ கூட்டம்!
சங்கரன் கோவில் அருகே மலையடிக் குறிச்சியில் தீப்பற்றி எரிந்த நிலையில் இருந்த ஆட்டோவில் உடல் முற்றிலும் எரிந்து கருகிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே மலையடிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைத்துரை. இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு முதல் இவரை காணவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, உறவினர்கள் இவரை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை மலையடிக்குறிச்சி ஊருக்கு புறமாக உள்ள உள்ள கீழ சிந்தாமணி பெரிய குளத்தில் வெள்ளத்துரையின் ஆட்டோ தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த நிலையில் நின்றுள்ளது.
அவ்வழியாக சென்றவர்கள் அருகே சென்று பார்த்தபோது ஆட்டோவில் உடல் கருகிய நிலையில் வெள்ளத்துரை சடலமாக கிடப்பதை கண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புளியங்குடி காவல் துறையினர், வெள்ளைத்துரையின் சடலத்தை மீட்டு கருகிய நிலையில் இருந்த வெள்ளைத்துரையின் சடலத்தை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் வெள்ளத்துரை தனது மரணத்திற்கு காரணம் குறித்து வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தனது மரணத்திற்கு சொக்கம்பட்டியில் உள்ள தனது தங்கையின் கணவர் மற்றும் அவரது மகன் தான் காரணம் என கூறிவிட்டு அதை வலதளங்களில் பரவ விட்டு உள்ளார். இந்த சம்பவம் தற்போது சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்க:தடையை மீறி போராட்டம்...கன்னட அமைப்பினரை கைது செய்த போலீசார்...!
திருவெறும்பூர் அருகே கடன் தொல்லையால் கடிதம் எழுதி வைத்து விட்டு வாலிபர் தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சி ஊராட்சி நத்தமாடிப்பட்டி, அந்தோணியார் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஆரோக்கியராஜ். இவரது மகன் வில்லியம் ஹென்றி (30). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அக்கௌன்ட் மேனேஜராக பணி புரிந்து வந்தார். நேற்று காய்ச்சல் காரணமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இவரது தந்தை ஆரோக்யராஜ், தாயார் மெர்சி ராணி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் இருவரும் வீடு திரும்பி வந்து பார்த்து போது, வராண்டா பகுதியில் மகன் வில்லியம் ஹென்றி சேலையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் உடலை கீழே இறக்கி பார்க்கையில் மகன் இறந்து போனது தெரிய வந்தது தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வில்லியம் ஹென்றி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது பற்றி விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இறந்து போன வில்லியம் ஹென்றி ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி கட்ட முடியாமல் அந்நிதி நிறுவனத்தின் வசூல் அழுத்தம் காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார் என்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் கடிதத்தை கைப்பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: தடையை மீறி போராட்டம்...கன்னட அமைப்பினரை கைது செய்த போலீசார்...!