நகைக்கடன் தள்ளுபடி.. 30 விதமான சைன்.. பெரிய வித்தைக்காரர்களா இருப்பார்களோ?.. பலே குரூப் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!

கிருஷ்ணகிரி அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் போலியாக கையெழுத்திட்டு நகைகள் மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது.

நகைக்கடன் தள்ளுபடி.. 30 விதமான சைன்.. பெரிய வித்தைக்காரர்களா இருப்பார்களோ?.. பலே குரூப் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!

ஊத்தங்கரையை அடுத்த எம் வெள்ளாளப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், மேட்டுத் தங்கலைச் சேர்ந்த ராஜா என்பவர் நகை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், நகைக்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டதால் தனது நகையை மீட்க ராஜா சென்றபோது, அவரது நகை ஏற்கனவே மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்து பார்த்ததில் ராஜா போலவே கையெழுத்திட்டு நகை மீட்கப்பட்டது அம்பலமானது. அதேபோல் சுமார் 30-க்கும் மேற்பட்டோரின் நகைகளை போலி கையெழுத்து மூலம் கையாடல் செய்தது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களும் முன்னாள் சேர்மன் மற்றும் முன்னாள் கேஷியர் ஆகியோர் மீது உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.