கேட்கும்போதெல்லாம் அள்ளிக் கொடுத்தேனே? இதுதான் நீ காட்டும் விஸ்வாசமா? எஜமானியை கொன்ற சமையல்கார பெண்!  

தஞ்சாவூரில் நகைக்காக வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவர் அவரது எஜமானியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேட்கும்போதெல்லாம் அள்ளிக் கொடுத்தேனே? இதுதான் நீ காட்டும் விஸ்வாசமா? எஜமானியை கொன்ற சமையல்கார பெண்!   

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் முத்தமிழ் செய்கிறார் என்ற தெருவைச் சேர்ந்தவர்தான் ஜாக்குலின். 65 வயதான ஜாக்குலினின் கணவர் சில வாரங்களுக்கு முன்புதான் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்தார். இவரது மகன் ப்ராங்க்ளின் என்பவர் தெற்கு ரெயில்வே துறையில் டி.டி.ஆராக வேலை செய்து வருகிறார். நல்ல பொருளாதாரப் பின்னணியைக் கொண்டதினால் ஜாக்குலினுக்கு வேலைக்கு துணையாக ஒருவர் தேவைப்பட்டிருந்தார். ஆரோக்கிய டென்சி என்பவரை அழைத்து, எனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. அப்பா இறந்து விட்டதால் பெரும் மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதனால் அவரை மிகவும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி அவரை பணியமர்த்தியிருக்கிறார் ப்ளாங்க்ளின் .

இந்த நிலையில் கடந்த 15-ம் தேதி வியாழக்கிழமையன்று பணியின் காரணமாக வெளியே சென்ற ப்ராங்க்ளின் அம்மாவிடம் பேச வேண்டும் என்பதற்கா போனில் தொடர்பு கொண்டார். வெகு நேரமாகியும் போனை எடுக்காமல் இருந்ததான் வேலைக்காரியான ஆரோக்கிய டென்சியை தொடர்பு கொண்டார். அப்போது அவர் தனது வீட்டில் இருப்பதாக தெரிவித்தாராம். எனவே, கலக்கமடைந்த ப்ராங்க்ளின் வீட்டில் தனது தாய் தனியாக இருக்கிறார் அவருக்கு என்ன ஆனதோ? என்று பதறியபடி வீட்டின் மாடியில் குடியிருப்பவர்களுக்கு போன் செய்து பேசினார்.

எனது அம்மாவுக்கு போன் செய்தேன். ஆனால் வெகு நேரமாகியும் எடுக்கவில்லை. கொஞ்சம் சிரமம் பார்க்காமல் என் அம்மா வீட்டுக்கு சென்று பாருங்கள் என்று ப்ராங்க்ளின் கூறியதையடுத்து, மாடியில் குடியிருந்தவர்கள் கீழே சென்று பார்த்தனர். கதவு திறந்த நிலையில் உள்ளே சென்று ஜாக்குலினை அழைத்தனர். ஆனால் எந்த வித எதிர் குரலும் விழவில்லை. உள்ளே சென்று பார்த்தவர்கள் ஒரு நிமிடம் அதிர்ந்து போனார்கள். வீட்டுக்குள் நாற்காலியில் அமர்ந்திருந்த ஜாக்குலின் எந்தவித அசைவும் இன்றி இறந்த நிலையில் காணப்பட்டார். யாரும் இல்லாத நேரத்தில் என்ன ஆனதோ? உடல் நிலை வேறு சரியில்லை என்று சொல்வார்களே? அதனால் ஏதும் நிகழ்ந்திருக்குமோ? என்று பதறியடித்தபடி, அவரது மகன் ப்ராங்க்ளினுக்கு போன் செய்து தகவல் கூறினர்.

தனது தாய் இறந்த செய்தி கேட்டு கதறியழுதபடி, ஓடி வந்து பார்த்தார் ப்ராங்க்ளின். அப்போது வெளியில் சென்ற வேலைக்காரி ஆரோக்கிய டென்சியும், வீட்டுக்குள் வந்து பார்த்தபோது, அதிர்ந்து போனார். நான் இல்லாத நேரத்தில் என்ன ஆனதோ? அம்மா.. என்று கதறி அழுது கொண்டிருந்தார். ஜாக்குலின் மேரிக்கு வலிப்பு நோய் இருப்பது அனைவருக்குமே தெரிந்திருந்தது. வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் ஜாக்குலின் வலிப்பு நோயால் அவதிப்பட்டு, காப்பாற்றுவதற்கு வெகு நேரமாக யாரும் வரவில்லை என்பதை அறிந்து அனைவரும் கண்ணீர் வடித்தனர். ஜாக்குலினின் இறுதிச்சடங்கும் நடந்தேறி முடிந்தது.  மகள் ப்ராங்க்ளின் அழுததைக் கவனித்த வேலைக்காரி ஆரோக்கிய டென்சி, அவருக்கு ஆறுதல் கூறினார். நான் இருந்திருந்தால் அம்மாவைக் காப்பாற்றியிருப்பேன். நான் இல்லாமல் போய் விட்டேனே.. என்று கதறி அழுது மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதோடு இறுதிச்சடங்கில் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து கொண்டிருந்தார் ஆரோக்கியமேரி.

ஜாக்குலின் இறந்த தகவல் அறிந்து போலீசார் வந்து வழக்குப்பதிவு செய்ய முற்பட்டனர். ஆனால் வலிப்பு நோயினால் இறந்திருக்கிறார் என்பதை யூகித்துக் கொண்டவர்கள், அப்படியே வழக்கினை முடித்து விட்டனர்.  ஜாக்குலின் இறந்ததற்கு பின்னாடி, போலீசார் வந்து கேஸ் போட வந்தாங்க. தனது தாய் வலிப்பு நோயால்தான் இறந்திருப்பார் என்று ப்ராங்க்ளின் சொன்னதால கேசை முடிச்சிகிட்டாங்க.. ஆனா, கடைசி நேரத்துல ப்ராங்க்ளினுக்கு ஒரு சந்தேகம் உண்டாகிச்சு. தனது தாய் தானா இறக்கல, யாரோ கொலை பண்ணிருக்காங்கன்னு.. யாரு கொன்னாங்க?

தனது தாயின் மரணத்தினால் உருக்குலைந்து போன ப்ராங்க்ளின் அவரது உடலைப் பார்த்துக் கதறியழுது கொண்டிருந்தார். இப்படி இருந்த நிலையில் தாய் ஜாக்குலின் அணிந்திருந்த செயின், வளையல் ஆகியவற்றை காணவில்லை. தங்க வளையல், செயின் எங்கே போனது? என்று வீட்டின் உள்ளே சென்று தேடிப் பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தாய் ஜாக்குலின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். அதையடுத்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற உடற்கூறு ஆய்வில் ஜாக்குலின் கொலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை வந்தது. அப்போதுதான் ப்ராபோலீசாருக்கும் சந்தேகப்பார்வை பிறந்தது.

போலீசாரும் இரண்டு தனிப்படை அமைத்து விசாரணையைத் தொடங்கினர். அப்போது விசாரணையில் முதல்கட்டமாக, வீட்டில் வேலை செய்த ஆரோக்கிய டென்சியிடம் இருந்து தொடங்கினர். ஆனால் அவரை விசாரித்த பின்பு, அவர் மீது இருந்த சந்தேகம் மேலும் உறுதியானது. விசாரணையில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அடுக்கிக் கொண்டே போனார். மகன் டி.டி.ஆர். என்பதாலும், ஏற்கெனேவ, அவர்களிடம் நகை, பணம் அதிகமாகவே இருந்திருக்கிறது என்பதாலும், ஜாக்குலின் மேரி அதிக கவனத்தோடுதான் இருந்து வந்தார். தனது மகன் வீட்டில் இல்லாத நேரத்தில் தனக்கு ஏதேனும் நிகழ்ந்து விட்டால் என்ன செய்வது என்று மகனிடம் யோசனை கேட்டுள்ளார். அதன்பின்புதான், ஆரோக்கிய டென்சி அறிமுகமாகி வீட்டில் வேலைக்காரியாக பணியமர்த்தினர்.

வேலைக்காரிதான் என்றாலும், டென்சியை அன்பு வைத்து வந்தார்.பெற்ற மகன் வீட்டில் சிறிது நேரம்தான் உடன் இருப்பார். ஆனால் வேலைக்காரியுடன் அதிக நேரம் செலவிட நேர்ந்தது. அவளது சொந்த விருப்பு, வெறுப்புகளையெல்லாம் எஜமானி அம்மாவிடம் பகிர்ந்திருக்கிறார். பாவம், நம்மை நம்பி வந்தவள் என்று ஜாக்குலினும், அடிக்கடி பண உதவிகளும் வழங்கி வந்திருக்கிறார். இந்த நிலையில் தனக்கு அதிகமாக இடம் அளித்த ஜாக்குலின் மீது பரிவு பாசம் வராமல், பொறாமை வந்திருக்கிறது. யாரும் இல்லாத இந்த வீட்டில் இவர் மட்டும் தனியாக அமர்ந்து என்ன செய்யப் போகிறார்? அவரது மகனும் இங்கு இல்லை. யாரும் வந்து கொள்ளையடித்துச் சென்றால் கூட, யார் மீதும் சந்தேகம் எழுந்து விடாது என்று நினைத்தவர், நாமே அதைச் செய்தால் என்ன என்று நினைத்திருக்கிறார். அப்போதுதான் முதற்கட்டமாக, ஜாக்குலின் கழுத்தில் கிடந்த ஐந்தரை பவுண் தங்க செயின் தென்பட்டிருக்கிறது.

அதிலிருந்து தொடங்குவோம் என நினைத்தவர், தூங்கிக் கொண்டிருக்கும் போது, செயினை அபேஸ் செய்ய முற்பட்டிருக்கிறார். ஆனால் கழுத்தில் செயினை கழற்றுவதை அறிந்து கொண்ட ஜாக்குலின், விழித்துக் கொண்டார். உடனே, ஏனடி, இப்படி செய்கிறாய்? உனக்கு எதற்கு இந்த எண்ணம்? நீ கேட்கும்போதெல்லாம் அள்ளிக் கொடுத்தேனே? இதுதான் நீ காட்டும் விஸ்வாசமா? என்று கண்ணீர் மல்க கேட்டிருக்கிறார். ஆனால் தங்கத்தின் மீது குறி வைத்த ஆரோக்கிய டென்சி, அவரை கீழே சாய்த்து, கழுத்தில் துணியை வைத்து இறுக்கியிருக்கிறார். தனக்கு உதவியாக வைத்துக் கொண்டோம் என்று பார்த்தால் தன்னையே கொலை செய்கிறாளே என்று கதறி அழுத ஜாக்குலின் மேரியின் வாயைப் பொத்தியவறே, இறுக்கிப் பிடித்து மூச்சடங்க வைத்தார். இறந்து போன ஜாக்குலினை அப்படியே நாற்காலியில் உட்கார வைத்து விட்டு, வலிப்பு வந்தது போல சித்தரித்து விட்டு, அவரது வீட்டுக்கு செல்வதற்கு திட்டமிட்டார் டென்சி. ஆனால் கடைசி நேரத்தில் ஒன்றை நினைத்தாள். அவரது மகன் ப்ராங்க்ளின் அடிக்கடி போன் செய்து கொண்டிருப்பார்.. என்ன செய்வது? என்று நினைத்தவர், உடனே ஜாக்குலின் பயன்படுத்திய மொபைல் போனை எடுத்து மாடிக்கு கொண்டு சென்று தண்ணீர் தொட்டியில் வீசினார்.

அதன் பின்பு, அவரது வீட்டுக்கு சென்று எதுவும் தெரியாதது போல மீண்டும் வந்து கதறி அழுது கூப்பாடு போட்டிருக்கிறார். போலீசாரின் விசாரணையில் இந்த உண்மை எல்லாம் தெரியவந்தது. தனது எஜமானி என்றும் பாராமல், உடல் நிலை சரியில்லாதவர் என்கிற இரக்கம் இல்லாமல், தனக்கு பல முறை உதவிகள் செய்து வந்தவர் என்றும் பாராமல், நம்பிக்கை துரோகம் செய்து கொலை செய்த ஆரோக்கிய டென்சியின் செயல் குறித்து அந்த பகுதி மக்கள் மருகி வருகின்றனர்.

கேட்காம செய்றதுதான் உதவி. அந்த உதவியை கேட்காம செய்றவங்க நமக்கு தெய்வம் மாதிரி. இந்த மாதிரியான ஒருவர் கிட்ட இருந்தா, முடிஞ்ச அளவுக்கு விஸ்வாசத்தைதான் காட்டணுமே தவிர, நம்பிக்கை துரோகம் பண்ணிடக்கூடாது. அதே நேரம், என்னதான் இருந்தாலும், எல்லாரையும் பொதுவா நம்பக்கூடாது அப்படிங்குறதுக்கும் இந்த சம்பவம் ஒரு சாட்சியா இருக்கு.